உலகம்

அதிகமாக தண்ணீர் குடித்ததே காரணம்.. புரூஸ் லீ மரணத்தில் 50 ஆண்டுக்குப் பிறகு வெளியான பரபரப்பு தகவல்!

மூளை வீக்கத்தால்தான் நடிகர் புரூஸ் லீ உயிரிழந்ததாக 50 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய தகவல் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகமாக தண்ணீர் குடித்ததே காரணம்.. புரூஸ் லீ மரணத்தில் 50 ஆண்டுக்குப் பிறகு வெளியான பரபரப்பு தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

குங்ஃபூ என்றால் புரூஸ் லீ, புரூஸ் லீ என்றால் குங்ஃபூ. இப்போதும் இந்த இரண்டையும் யாராலும் பிரிக்க முடியாது. தனக்குத் தெரிந்த குங்ஃபூ கலையை வைத்தே அமெரிக்கச் சினமா உலகில் கொடிகட்டிப் பறந்தவர் என்றால் அது புரூஸ் லீ-யாகத்தான் இருக்க முடியும்.

இவரின் படத்தில் வரும் சண்டை காட்சிகள் ஒவ்வொன்றும் இடிபோல இருக்கும். இவருடன் நடிக்கவே சக நடிகர்கள் அச்சப்படுவார்கள். சண்டைக் காட்சிகள் நிஜமாகவே இருக்க வேண்டும் என்பதற்காக சக நடிகர்களை உண்மையாகவே சில நேரத்தில் தாக்கி விடுவார்.

அமெரிக்க சினிமாவில் நுழைந்த சில காலத்திலேயே சடசடவென புரூஸ் லீயின் புகழ் வளர்ந்தது. குங்க் ஃபூ, ஜூடோ போன்ற தற்காப்புக் கலைகள் புகழ்பெற்றன. சினிமாவில் காட்டப்படாத விஷயங்களை மொத்தமாக ரசிகர்களுக்குக் கொடுத்து ஈர்த்தார் புரூஸ் லீ. மிக எளிமையான உடல்வாகு கொண்ட ஆசிய நாட்டை சேர்ந்த ஒருவன் அமெரிக்காவுக்கு அறிமுகப்படுத்திய விஷயங்கள் அமெரிக்காவுக்கு மட்டுமின்றி உலகுக்கே புதியவையாக இருந்தன.

அதிகமாக தண்ணீர் குடித்ததே காரணம்.. புரூஸ் லீ மரணத்தில் 50 ஆண்டுக்குப் பிறகு வெளியான பரபரப்பு தகவல்!

இவர் நடித்த பிஸ்ட் ஆஃப் பியூரி, வே ஆஃப் தி டிராகன், கேம் ஆஃப் டெத் ஆகிய படங்களும் வசூலை வாரி குவித்தன. இவரது அதிரடி சண்டைக் காட்சிகளைப் பார்ப்பதற்காகவே உலகம் முழுவதும் ரசிகர்கள் திரையரங்கில் குவிந்தனர்.

இப்படி இவர் சினிமா உலகத்தின் புகழ் உச்சியில் இருக்கும்போதோ 1973ம் ஆண்டு தனது 32 வயதில் உயிரிழந்தார். இவர் கடைசியாக நடித்த படம் எண்டர் தி டிராகன். இப்படம் பெரிய வரவேற்பைப் பெற்றது. ஆனால் இந்த படம்வெளியாவதற்குள்ளே அவர் இறந்துவிட்டார்.

இதையடுத்து அவரது மரணம் பற்றி பல்வேறு கதைகள் இப்போது வரைக் கூறப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அதில் அவர் விஷம் வைத்துக் கொல்லப்பட்டாகக் கூறப்படுவதும் ஒன்று. இந்நிலையில் 50 ஆண்டுகளுக்கு பறகு மூளை வீக்கத்தால்தான் நடிகர் புருஸ் லீ உயிரிழந்துள்ளதாக புத்தகம் ஒன்றில் கூறப்பட்டுள்ளது மீண்டும் அவரது மர்ம மரணத்தைப் பேசுபொருளாக்கியுள்ளது.

அதிகமாக தண்ணீர் குடித்ததே காரணம்.. புரூஸ் லீ மரணத்தில் 50 ஆண்டுக்குப் பிறகு வெளியான பரபரப்பு தகவல்!

'கிளினிக்கல் ஜர்னல்' என்ற புத்தகத்தில்தான் நடிகர் புரூஸ் லீ இப்படிதான் உயிரிழந்ததாக எழுதப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், புரூஸ் லீ அதிகமாக உடற்பயிற்சி செய்வதால் அவர் பழச்சாறுகள் மற்றும் புரோட்டின் திரவங்களை அதிகம் குடித்துள்ளார். இதனால் அவருக்கு அதிக அளவில் தாகம் எடுத்துள்ளது. அப்போது எல்லாம் தண்ணீர் குடித்து வந்துள்ளார்.

இதனால் தண்ணீரைப் பிரிக்கும் சக்தியை அவருடைய சிறுநீரகம் பெற்றிருக்கவில்லை. இதன் காரணமாக அவரது மூளையின் அளவு பெரிதாகவிட்டது. இப்படியான பாதிப்புகளுக்கு மருத்துவ ரீதியாக எடிமா என்று அழைக்கப்படுகிறது. சராசரியாக ஒரு மனிதனுக்கு மூளை14000 கிராமம் தான் இருக்கும். ஆனால் நடிகர் புரூஸ் லீ-க்கு 1575 கிராம் இருந்துள்ளது. இதன் காரணமாகவே திடீரென உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மீண்டும் 50 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் புரூஸ் லீ மரணம் குறித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories