உலகம்

Mark குறைத்ததால் ஆத்திரம்.. வீட்டிற்கு சென்ற ஆசிரியரை கொலை செய்த சிறுவர்கள்: அமெரிக்காவில் அதிர்ச்சி!

அமெரிக்காவில், 16 வயது மாணவர்கள் தங்களது வகுப்பு ஆசிரியரைக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Mark குறைத்ததால் ஆத்திரம்..  வீட்டிற்கு சென்ற ஆசிரியரை கொலை செய்த சிறுவர்கள்: அமெரிக்காவில் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அமெரிக்காவில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக இருந்தவர் நோஹோமா கிராபர். இவர் பள்ளி முடித்து விட்டு வீட்டிற்குச் செல்லும் போது இரண்டு சிறுவர்கள் அவரை குத்தி கொலை செய்து உடலை அருகே இருந்த பூங்காவில் மறைத்துள்ளனர்.

பின்னர் அவரது உடலை மீட்ட போலிஸார் இது குறித்து விசாரணை செய்தனர். அதில் கொலை செய்யப்பட்ட ஆசிரியரின் வகுப்பில் படித்து வந்த வில்லார்ட் மில்லர், ஜெர்மி குடேல் ஆகிய இரண்டு மாணவர்கள்தான் கொலை செய்துள்ளனர் என்பதை போலிஸார் கண்டுபிடித்து கைது செய்தனர்.

Mark குறைத்ததால் ஆத்திரம்..  வீட்டிற்கு சென்ற ஆசிரியரை கொலை செய்த சிறுவர்கள்: அமெரிக்காவில் அதிர்ச்சி!

பின்னர், அவர்களிடம் நடத்திய விசாரணையில், தேர்வில் மதிப்பெண் குறைவாக கொடுத்ததால் ஆசிரியரை இருவரும் சேர்ந்து கொலை செய்தது கொலை செய்தது தெரியவந்தது. இந்த கொலை கடந்த 2021ம் ஆண்டு நடந்துள்ளது.

இந்த கொலை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் ஒரு வருடத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. மதிப்பெண் குறைந்து வழங்கியதால்தான் கொலை நடந்துள்ளது என போலிஸார் கூறிவந்தாலும், சிறுவர்களது வழக்கறிஞர்கள் அதை மறுத்து வருகின்றனர். இதனால் இன்னும் சிறுவர்கள் இருவருக்கும் ண்டனை வழங்காமல் உள்ளது நீதிமன்றம். மேலும் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Mark குறைத்ததால் ஆத்திரம்..  வீட்டிற்கு சென்ற ஆசிரியரை கொலை செய்த சிறுவர்கள்: அமெரிக்காவில் அதிர்ச்சி!

அதேபோல் நீதிமன்ற விசாரணையில் ஆசிரியர் கொலை செய்யப்பட்டது உறுதியானால் சிறுவர்கள் இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்படும் என கூறப்படுகிறது. 16 வயது மாணவர்கள் தங்களது வகுப்பு ஆசிரியரைக் கொலை செய்த சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories