உலகம்

நடுவானில் திடீரென ஏற்பட்ட புயல்.. உடைந்த விமான பாகங்கள்.. இறுதியில் நிகழ்ந்த அதிசயம் ! அதிர்ச்சி வீடியோ !

நடுவானில் திடீரென ஏற்பட்ட புயலில் சிக்கி விமானம் கடுமையாக சேதமடைந்த நிலையில், பயணிகளுக்கு பாதிப்பின்றி விமானம் தரையிறங்கியது.

நடுவானில் திடீரென ஏற்பட்ட புயல்.. உடைந்த விமான பாகங்கள்.. இறுதியில் நிகழ்ந்த அதிசயம் ! அதிர்ச்சி வீடியோ !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தென்னமெரிக்க நாடான சிலியின் சாண்டிகோ நகரில் இருந்து பராகுவே நாட்டின் அசன்சியன் நகருக்கு 48 பயணிகளுடன் விமானம் ஒன்று சென்றுள்ளது. இந்த விமானம் நடுவலில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென அந்த பகுதியில் கடுமையான புயல் வீசியுள்ளது.

இந்த புயலில் இந்த விமானம் சிக்கும் நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து விமானம் ஃபோஸ் டி இகுவாக் என்ற நகருக்கு திருப்பிவிடப்பட்டது. அந்த நகரில் சுமார் 3 மணி நேரம் இருந்த விமானம் புயல் பாதிப்பு குறைந்ததாக வந்த தகவலைத் தொடர்ந்து மீண்டும் வானில் பயணிக்க தொடங்கியது.

நடுவானில் திடீரென ஏற்பட்ட புயல்.. உடைந்த விமான பாகங்கள்.. இறுதியில் நிகழ்ந்த அதிசயம் ! அதிர்ச்சி வீடியோ !

ஆனால் புறப்பட்டு சிறிது நேரம் ஆகிய நிலையில் அந்த பகுதியில் திடீரென வீசிய புயலில் சிக்கியுள்ளது. இந்த புயல் காரணமாக விமானம் பயங்கரமான குலுங்கியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் நடுவானில் உயிர்க்கு பயந்து அபாயமிட்டுள்ளனர்.

மேலும், திடீரென விமானத்தின் முன்கண்ணாடியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அபாய சூழலிலும் 5 மணி நேரம் பறந்தவிமானி பின்னர் இறுதியாக விமானத்தை பத்திரமாக அசன்சியன் விமானத்தில் எமர்ஜென்சி லேண்டிங் செய்து பயணிகள் உயிரை காப்பாற்றினார்.

இந்த அபாய சூழலில் விமானத்தின் பயணிகளின் உடமைகள் அங்கும் இங்கும் சிதறியதாகவும், ஆனால் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதும் தெரியவந்தது. இந்த நிலையில், தற்போது இது தொடர்பாக வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories