உலகம்

கோஹினுார் வைரம் பதித்த கிரீடத்துக்கு NO.. பிரிட்டனின் புதிய ராணி முடிவு ? பின்னணி என்ன ?

பிரிட்டனின் ராணியாக பொறுப்பேற்கவுள்ள கமிலா கோஹினுார் வைரம் பதித்த கிரீடத்தை அணிவதை தவிர்க்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோஹினுார் வைரம் பதித்த கிரீடத்துக்கு NO..  பிரிட்டனின் புதிய ராணி முடிவு ? பின்னணி என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் உடல் நலக்குறைவால் சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்தார். இவரின் மரணம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவரின் மறைவை அடுத்து உலக தலைவர்கள் ராணி எலிசபெத்துக்கு இரங்கல் தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து ராணியின் இறுதி சடங்கு லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேவில் கடந்த மாதம் 19-ம் தேதி நடைபெற்றது. இதில் இந்திய குடியரசுத் தலைவர் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்தவரால் பங்கேற்றனர். இது தவிர பல லட்சம் பொதுமக்கள் ராணியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

கோஹினுார் வைரம் பதித்த கிரீடத்துக்கு NO..  பிரிட்டனின் புதிய ராணி முடிவு ? பின்னணி என்ன ?

ராணியின் மறைவைத் தொடர்ந்து பிரிட்டனின் மன்னர் மூன்றாம் சார்லஸ், அடுத்தாண்டு மே 6ல் நடக்கும் நிகழ்ச்சியில் மன்னராக முடிசூட்டப்பட உள்ளார். அவரின் மனைவி கமிலா பிரிட்டனின் ராணியாக முடிசூடவுள்ளார். வழக்கமாக பிரிட்டன் ராணிகள் கோஹினுார் வைரம் பதித்த கிரீடத்தையே அணிவர். ராணி எலிசபெத்தும் முக்கிய நிகழ்ச்சிகளில் அந்த கிரீடத்தையே அணிவார்.

இந்த நிலையில், கோஹினுார் வைரம் பதித்த கிரீடத்தை அணிவதை ராணி கமிலா தவிர்க்கவுள்ளதாக பிரிட்டன் செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கோஹினுார் ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்ட காலத்தில் இங்கிருந்து பறித்துச்செல்லப்பட்டது. அதை இந்தியாவிடம் மீண்டும் ஒப்படைக்குமாறு பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை முன்வைத்தே ராணி கமிலா அதை தவிர்க்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories