உலகம்

சொத்தையான பற்கள்.. அதிக அளவில் குளிர்பானங்களை குடித்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..மருத்துவர்கள் எச்சரிக்கை!

சோடா குளிர்பானங்களை அதிக அளவில் குடித்ததால் பெண் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சொத்தையான பற்கள்.. அதிக அளவில் குளிர்பானங்களை குடித்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..மருத்துவர்கள் எச்சரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

குளிர்பானம் போன்ற பானங்களை அதிக அளவில் எடுத்துக்கொண்டால் பல்சொத்தை, உடல்நலக்கோளாறு ஆகியவை ஏற்படும் என மருத்துவநிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். ஆனால் அதனை பலர் பின்பற்றுவதில்லை.

இந்த நிலையில் தொடர்ந்து அதிக அளவில் சோடா குளிர்பானங்களை அதிக அளவில் குடித்ததால் பெண் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தென்பகுதியில் அமைண்ட்துள்ள மாலத்தீவை சேர்ந்தவர் ரூஹா (வயது 18). இவர் சோடா அடங்கிய குளிர்பானங்களை அதிக அளவில் குடித்து வந்துள்ளார். இது தொடர்பாக பலர் எச்சரிக்கை விடுத்த நிலையில் அதை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார்.

சொத்தையான பற்கள்.. அதிக அளவில் குளிர்பானங்களை குடித்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..மருத்துவர்கள் எச்சரிக்கை!

இது அவருக்கு இறுதியில் பெரும் பாதிப்பை கொடுத்துள்ளது. சோடாவின் காரணமாக அவரின் பற்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு சொத்தையாகியுள்ளது. அதிலும் குறிப்பாக மேல் பக்கம் இருக்கும் பற்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்காக மாலத்தீவில் இருக்கும் மருத்துவமனையை அவர் அனுகியுள்ளார். அங்கு இந்தியாவில் இருக்கும் மருத்துவமனையை அணுகுமாறு கூறியுள்ளனர். அதன்படி அவர் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளார்.

அங்கு அவருக்கு நல்ல முறையில் பல் கட்டப்பட்டுள்ள நிலையில் தற்போது நல்ல நிலையில் தோற்றம் அளிக்கிறார். எனவே அதிக அளவில் குளிர்பானம் அருந்தக்கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்தது வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories