உலகம்

66 குழந்தைகள் பலி.. இந்தியாவில் தயாரான இருமல், சளி மருந்திற்கு WHO தடை: உலக நாடுகளுக்கு எச்சரிக்கை!

காம்பியா நாட்டில் இந்தியாவில் தயாரான இரும்பல் மருந்தைச் சாப்பிட்ட 66 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

66 குழந்தைகள் பலி.. இந்தியாவில் தயாரான இருமல், சளி மருந்திற்கு WHO தடை: உலக நாடுகளுக்கு  எச்சரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆப்ரிக்கா நாடான காம்பியாவில் கடந்த ஜூலை மாதம் அடுத்தடுத்து 66 குழந்தைகள் சிறுநீகர பாதிப்பால் உயிரிழந்துள்ளன. இது குறித்து விசாரணை செய்தபோது ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த Maiden Pharmaceuticals Limited தயாரித்த இருமல் மருந்தை சாப்பிட்டது தெரியவந்துள்ளது.இது குறித்து விரிவான விசாரணை நடத்தவும் அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் Maiden Pharmaceuticals Limited தயாரித்த 4 இருமல் மற்றும் சளி மருந்தைப் பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார நிறுவனம் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

66 குழந்தைகள் பலி.. இந்தியாவில் தயாரான இருமல், சளி மருந்திற்கு WHO தடை: உலக நாடுகளுக்கு  எச்சரிக்கை!

இது குறித்துக் கூறிய WHO இயக்குநர் ஜெனரல் டேட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், "டை எத்திலீன் கிளைக்கால் அதிக அளவில் கலந்த மருந்துகளை எடுத்துக்கொண்டால் வயிற்றுவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை, தலைவலி, சிறுநீரக பாதிப்பு, மனநிலை பாதிப்பு உள்ளிட்டவை ஏற்படும்,.

66 குழந்தைகள் பலி.. இந்தியாவில் தயாரான இருமல், சளி மருந்திற்கு WHO தடை: உலக நாடுகளுக்கு  எச்சரிக்கை!

எனவே குரோம் மெத்தஸைன், பேபி கார்ப் சிரப் உள்ளிட்ட 4 மருந்துகளைக் குழந்தைகளுக்கு கொடுப்பது மிகவும் ஆபத்தானது என தெரிவித்துள்ளார். மேலும் வேறு எந்த நாடுகளில் எல்லாம் இந்த மருந்து விற்பனையில் உள்ளது என்பதைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் எனவும் WHO கோரிக்கை விடுத்துள்ளது.

banner

Related Stories

Related Stories