உலகம்

எலிசபெத் ராணிக்கு கூட இவ்வளவு செலவு இல்லையே.. ஜப்பான் முன்னாள் பிரதமர் இறுதிச்சடங்குக்கு இவ்வளவு தொகையா ?

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதிச்சடங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு அதிக தொகை செலவிடப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எலிசபெத் ராணிக்கு கூட இவ்வளவு செலவு இல்லையே.. ஜப்பான் முன்னாள் பிரதமர் இறுதிச்சடங்குக்கு இவ்வளவு தொகையா ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஜப்பான் வரலாற்றில் அதிகமுறை பிரதமராக இருந்தவர் என்ற பெயரை பெற்றவர் ஷின்சோ அபே(வயது 67). இவருக்கு இந்திய அரசு பத்ம விபூஷன் விருதை வழங்கி கெளரவித்துள்ளது. இவர் கடந்த ஜூலை மாதம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது துப்பாக்கியால் சுடப்பட்டு மரணமடைந்தார்.

இவர் உடல் தகனம் செய்யப்பட்ட நிலையில், அரசு சார்பில் அவருக்கு இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் தலைநகர் டோக்கியோவில் வருகிற செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க உலக நாடுகளின் தலைவர்களுக்கு ஜப்பான் அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

எலிசபெத் ராணிக்கு கூட இவ்வளவு செலவு இல்லையே.. ஜப்பான் முன்னாள் பிரதமர் இறுதிச்சடங்குக்கு இவ்வளவு தொகையா ?

ஷின்சோ அபே புகப்பெற்ற உலகத்தலைவர் என்பதால் இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமானோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக டோக்கியோவில் ஏராளமான பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இதற்காக 1.66 பில்லியன் யென் (இந்திய மதிப்பில் ரூ. 94 கோடி) செலவிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இது அந்த நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனை கண்டித்து ஜப்பானின் பல்வேறு இடங்களில் போராட்டங்களும் நடைபெற்றுவருகிறது.

எலிசபெத் ராணிக்கு கூட இவ்வளவு செலவு இல்லையே.. ஜப்பான் முன்னாள் பிரதமர் இறுதிச்சடங்குக்கு இவ்வளவு தொகையா ?

சமீபத்தில் மரணமடைந்த ராணி எலிசபெத் இறுதி ஊர்வலத்தில் பாதுகாப்புப் பணிகளுக்காக மட்டும் ரூ.59 கோடி செலவிடப்பட்டது. ஆனால் ஷின்சோ அபேவுக்கு அதை விட அதிகமாக செலவிடப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசின் இந்த முடிவினை எதிர்ப்பு பிரதமர் அலுவலகம் அருகே ஒருவர் தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

banner

Related Stories

Related Stories