உலகம்

பாறைகளுக்கு நடுவே நிர்வாணமாக சிக்கிய இளைஞர்.. 300 அடி உயரத்தில் அழுது கொண்டிருந்தவரை மீட்ட ராணுவம் !

வனப்பகுதியில் இரண்டு பாறைகளுக்கு இடையே 300 அடி உயரத்தில் நிர்வாணமாக அழுது கொண்டிருந்தவரை ராணுவம் பத்திரமாக மீட்டுள்ளது.

பாறைகளுக்கு நடுவே நிர்வாணமாக சிக்கிய இளைஞர்..  300 அடி உயரத்தில் அழுது கொண்டிருந்தவரை மீட்ட ராணுவம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பிரேசில் நாட்டின் மெஸ்ட்ரி அல்வேரோ வனகாப்பகத்தில் நிர்வாண நிலையில் ஒருவர் பாறைகளுக்கு நடுவே சிக்கியிருப்பதாக ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவல் கிடைத்ததில் ராணுவத்தினர் உடனடியாக அந்த இடத்துக்கு சென்றுள்ளனர்.

அப்போது அங்கு, கிட்டதட்ட 300 அடி உயரத்தில் இருந்த பாறையின் இடையே ஒருவர் சிக்கியிருப்பதை கண்டு ராணுவத்தினருக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. உடனடியாக விமானப்படைக்கு தககல் தெரிவிக்கப்பட்டது..

பாறைகளுக்கு நடுவே நிர்வாணமாக சிக்கிய இளைஞர்..  300 அடி உயரத்தில் அழுது கொண்டிருந்தவரை மீட்ட ராணுவம் !

பின்னர் அங்கு வந்த பிரேசிலிய விமானப்படையின் மேஜர் பாப்லோ ஏஞ்சலி மார்க்வெஸ் தலைமையிலான படையினர் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் நிர்வாண நிலையில் நின்று கொண்டிருந்த அந்த நபரை உயிருடன் பத்திரமாக மீட்டனர்.

இந்த மீட்பு குறித்து ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், பாறைக்கு இடையில் சிக்கியவர்களுக்கு 40 வயதிருக்கலாம் என்றும், 300 அடி உயரத்தில் இருந்த பாறையின் இடையே கீழே விழும்படியான ஆபத்தான நிலையில் பத்திரமாக அவர் மீட்கப்பட்டார் என்றும் கூறியுள்ளார்.

பாறைகளுக்கு நடுவே நிர்வாணமாக சிக்கிய இளைஞர்..  300 அடி உயரத்தில் அழுது கொண்டிருந்தவரை மீட்ட ராணுவம் !

அந்த நபர் எதற்க்காக அங்கே சென்றார் என்பது தெரியவில்லை என்றும், அவர் நண்பர்களோடு அந்த பகுதிக்கு வந்திருக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

banner

Related Stories

Related Stories