உலகம்

குதிரை வண்டியின் முன் தோற்றுப்போன டெஸ்டா கார்- எலான் மஸ்க்கை கிண்டல் செய்யும் இணையவாசிகள்! பின்னணி என்ன?

டெஸ்லா காரின் ஆட்டோ பிளாட் சிஸ்டம் குதிரை வண்டியை பெரிய சரக்கு லாரி என புரிந்துகொண்டுள்ளது இணையத்தில் வைரலாகியுள்ளது.

குதிரை வண்டியின் முன் தோற்றுப்போன டெஸ்டா கார்-  எலான் மஸ்க்கை கிண்டல் செய்யும் இணையவாசிகள்! பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உலகளவில் டெஸ்லா நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார்களே நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளன. தினமும் புதிது புதிதாக அறிமுகப்படுத்தப்படும் அதன் தொழில்நுட்பங்கள் எப்போதும் அதை உயர்ந்த இடத்தில் வைத்துள்ளன.

அதன்படி சமீபத்தில் டெஸ்லா நிறுவனம் அதன் கார்களில் ஆட்டோ பைலட் எனப்படும் தானியங்கி கருவி செயல்பாட்டை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் செல்லும் இடத்தை உள்ளிட்டால் கார்ட் தானாகவே அந்த இடத்துக்கு சென்று விடும். இவை கார்களில் உள்ள நேவிகேஷன், சென்சார், GPS ஆகியவற்றின் உதவியுடன் வேலைசெய்கிறது. இவை நகரும் பாதையில் இடர்பாடுகள் ஏற்பட்டால் தானாகவே இவை நின்றுவிடும்.

குதிரை வண்டியின் முன் தோற்றுப்போன டெஸ்டா கார்-  எலான் மஸ்க்கை கிண்டல் செய்யும் இணையவாசிகள்! பின்னணி என்ன?

மேலும், எதிரில் வரும் வாகனங்களை ஸ்கேன் செய்து அதற்கு ஏற்றபடி தனது நடவடிக்கையை மாற்றிக்கொள்ளும். இந்த சேவை உலகெங்கும் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் நிலையில், தற்போது அதில் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஸ்விட்சர்லாந்து நாட்டில் டெஸ்லா y மாடல் காரில் ரோட்டில் ஒருவர் சென்றுகொண்டிருந்தபோது அவரின் காரின் முன்னே ஒரு குதிரை வண்டி சென்றுகொண்டிருந்துள்ளது. அப்போது இதனை ஸ்கேன் செய்த டெஸ்லாவின் ஆட்டோ பைலட் சிஸ்டம் அதனை ஒரு பெரிய சரக்கு லாரி என புரிந்துகொண்டு அதனை டிஸ்பிலேவில் காட்டியுள்ளது.இதனை அந்த காரின் உரிமையாளர் இணையத்தில் வெளியிட அந்த புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது. இதனை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் டெஸ்லா நிறுவனர் எலான் மாஸ்க்கை கிண்டல் செய்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories