உலகம்

அதிக குழந்தை பெற்றால் சிறப்பு சலுகை.. U-turn அடித்த சீன அரசு.. காரணம் என்ன ?

சீனாவில் பிறப்பு விகிதம் குறைந்து வருவதால் அதிக குழந்தைகள் பெறும் தம்பதிகளுக்கு வரிகள் தள்ளுபடி செய்யப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

அதிக குழந்தை பெற்றால் சிறப்பு சலுகை.. U-turn அடித்த சீன அரசு.. காரணம் என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

உலகளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள் பட்டியலில் முதன்மையாக விளங்குகிறது சீனா. சீன நாட்டின் மக்கள் தொகை பெருக்கத்தால் பொருளாதாரம் சரிவடைகிறது என்று கூறி, மக்கள் தொகையை கட்டுப்படுத்த ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை என்ற விதியை சீன அரசு பல ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வந்தது.

அதிக குழந்தை பெற்றால் சிறப்பு சலுகை.. U-turn அடித்த சீன அரசு.. காரணம் என்ன ?

இந்த விதியின் விளைவாக அந்நாட்டில் மக்கள் தொகை குறைய தொடங்கியது. பின்னர் கடந்த 2016-ம் ஆண்டு ஒரு குழந்தை விதி ரத்து செய்யப்பட்டு, தம்பதிகள் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. இருப்பினும் அந்நாட்டில் பிறப்பு விகிதம் அதிகமாகாமல் குறைந்தே காணப்பட்டு வருகிறது.

அதிக குழந்தை பெற்றால் சிறப்பு சலுகை.. U-turn அடித்த சீன அரசு.. காரணம் என்ன ?

இந்த நிலையில், சீன மக்கள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்வதற்காக சிறப்பு சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.

அதன்படி எந்த தம்பதியினர் இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக்கொள்கிறார்களோ அவர்களுக்கு மானியம், வரி தள்ளுபடி, சிறந்த சுகாதார காப்பீடு, கல்வி, வீட்டுக் கடன், வேலை வாய்ப்பு உள்ளிட்ட சலுகைகளை வழங்கவதாக சீன அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு உலகளவில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories