உலகம்

Dear.. காதலனைப் பழிவாங்க செய்தித்தாளில் ஒரு பக்கம் விளம்பரம் கொடுத்த காதலி!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தன்னை ஏமாற்றிய காதலனை விமர்சித்து பத்திரிகையில் விளம்பரம் கொடுத்துள்ளது உலகம் முழுவதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Dear.. காதலனைப் பழிவாங்க செய்தித்தாளில் ஒரு பக்கம் விளம்பரம் கொடுத்த  காதலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்தவர் ஜென்னி. இவர் ஸ்டீவ் என்பவரைக் காதலித்து வந்துள்ளார். இதையடுத்து ஸ்டீவ் ஜென்னியுடனான காதலை முறித்துக் கொண்டுள்ளார்.

இதையடுத்து தன்னை ஏமாற்றிய காதலனைப் பழிவாங்க வேண்டும் என அவர் நினைத்து வந்துள்ளார். இந்நிலையில் Mackay and Whitsunday Life செய்தித்தாளில் காதலனை விமர்சித்து ஆகஸ்ட் 12ம் தேதி ஒரு முழுப்பக்க விளம்பரம் கொடுத்துள்ளார்.

Dear.. காதலனைப் பழிவாங்க செய்தித்தாளில் ஒரு பக்கம் விளம்பரம் கொடுத்த  காதலி!

அந்த விளம்பரத்தில் " டியர் ஸ்டீவ், நீ அவளுடன் மகிழ்ச்சியாக இருப்பாய் என நினைக்கிறேன். இப்போது நீ எவ்வளவு மோசமான ஏமாற்றுக்காரன் என்பதை இந்த நகரம் அறிந்து கொள்ளும். இந்த விளம்பரத்தை உனது கிரெடிட் கார்டை பயன்படுத்தித்தான் வெளியிட்டுள்ளேன். இப்படிக்கு ஜென்னி" என தெரிவித்துள்ளார்.

Dear.. காதலனைப் பழிவாங்க செய்தித்தாளில் ஒரு பக்கம் விளம்பரம் கொடுத்த  காதலி!

இதையடுத்து இந்த விளம்பரம் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. மேலும் ஜென்னி யார் எனவும் இணைய வாசிகள் தேடி வருகின்றனர். இவர் வெளியிட்டுள்ள இந்த பதிவுக்கு மட்டும் அதிகமாக லைக்குகள் குவிந்து வருகிறது. மேலும் இவரை போன்று பலரும் துணிச்சலுடன் செயல்பட வேண்டும் என பலரும் பலவிதமாக சமூகவலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories