இந்தியா

குழந்தையை கொன்று பொற்கோயிலில் விட்டு சென்ற தாய்.. காணவில்லை என நாடகமாடியது அம்பலம் - பின்னணி என்ன ?

பெற்ற தாயே குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்த பின், காணாமல் போனதாக நாடகமாடியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தையை கொன்று பொற்கோயிலில் விட்டு சென்ற தாய்.. காணவில்லை என நாடகமாடியது அம்பலம் - பின்னணி என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஹரியானா மாநிலத்திலுள்ள ஒரு பகுதியில் வசித்து வருபவர் மணீந்தர் கவுர். இவர் தனது கணவர், மகன், மகளுடன் அந்த பகுதியில் வசித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பெண், தனது 5 வயது மகளை காணவில்லை என்று காவல்துறையில் புகார் கொடுத்தார்.

இதையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுமியை தீவிரமாக தேடிவந்தனர். அந்த சமயத்தில் பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸிலுள்ள பொற்கோயிலில் ஒரு சிறுமியின் சடலம் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு விரைந்த அதிகாரிகள் சிறுமி குறித்து விசரணையை தொடங்கினர்.

குழந்தையை கொன்று பொற்கோயிலில் விட்டு சென்ற தாய்.. காணவில்லை என நாடகமாடியது அம்பலம் - பின்னணி என்ன ?

பின்னர் இது குறித்து விசாரணை நடத்தி வந்த அதிகாரிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது ஒரு பெண், அந்த சிறுமியை கையில் வைத்து தூக்கி கொண்டு இந்த கோயிலில் போட்டுவிட்டு சென்றுள்ளார். மேலும் அந்த பெண்ணுடன் ஒரு சிறுவனும் வந்துள்ளதும் கட்சியின் மூலம் தெரியவந்தது.

இதையடுத்து விசரணையை தீவிர படுத்திய அதிகாரிகள், காணாமல் போன சிறுமியும், சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சிறுமியும் ஒன்று என்று கண்டுபிடித்தனர். மேலும் சிசிடிவியில் இடம்பெற்ற பெண், சிறுமியின் தாய் என்றும் தெரியவந்தது.

குழந்தையை கொன்று பொற்கோயிலில் விட்டு சென்ற தாய்.. காணவில்லை என நாடகமாடியது அம்பலம் - பின்னணி என்ன ?

இதைத்தொடர்ந்து சிறுமியின் தாயை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் தந்தையிடமும் விசாரித்து வருகின்றனர். அப்போது தாய், தனது குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்துள்ளது தெரியவந்தது.

மேலும் அந்த பெண்ணுக்கு திருமணத்தை தாண்டி வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் எதற்காக குழந்தையை கொன்றார் என்று மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories