உலகம்

இறந்த பன்றியை உயிரோடு எழுப்பிய விஞ்ஞானிகள்.. இனி இறப்பே கிடையாதா? அமெரிக்காவில் நடந்த அறிவியல் புரட்சி !

செயற்கையான முறையை பன்றியை இறக்க செய்து பின் அதை உயிரோடு எழுப்பி விஞ்ஞானிகள் சாதனை ஒன்றை படைத்துள்ளனர்.

இறந்த பன்றியை உயிரோடு எழுப்பிய விஞ்ஞானிகள்.. இனி இறப்பே கிடையாதா? அமெரிக்காவில் நடந்த அறிவியல் புரட்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

2019ஆம் ஆண்டு ஒரு அமெரிக்க யேல் பல்கலைக்கழக விஞ்ஞான குழு, பன்றிகளை வைத்து சோதனை நடத்தியது. அதாவது செயற்கை முறையில் பன்றிகளுக்கு மாரடைப்பை தூண்டி அவற்றின் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. இப்படி இறந்த பன்றிகளை ஒருமணி நேரம் வைத்திருந்து பன்றிகளின் சொந்த இரத்தத்தை ஒரு திரவத்துடன் கலந்து அவற்றின் உடல்களில் பம்ப் செய்துள்ளனர்.

இந்த செயலின்போது, ரத்த அணுக்களுக்கு ஆக்சிஜனை சுமந்துசெல்லும் ஹீமோகுளோபினும் செலுத்தப்பட, ரத்தம் கட்டியாகுதலை தடுத்து செல்களை பாதுகாக்கும் மருந்துகளும் செலுத்தப்பட்டுள்ளது.

இறந்த பன்றியை உயிரோடு எழுப்பிய விஞ்ஞானிகள்.. இனி இறப்பே கிடையாதா? அமெரிக்காவில் நடந்த அறிவியல் புரட்சி !

இந்த ஆறுமணிநேர சோதனைக்குப்பிறகு இதயம், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் போன்ற உறுப்புகளில் இருந்த செல்கள் செயல்பட ஆரம்பித்தன. மேலும் பன்றிகளின் தலைகளில் அசைவும் தெரிந்துள்ளது. இது விஞ்ஞானிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த சோதனை சமீபத்திய ஆண்டுகளில் நடத்தப்பட்ட முக்கியமான அறிவியல் மைல்கல் என்றே அறியப்படுகிறது.

இந்த ஆய்வு தற்போது நேச்சர் இதழில் வெளியாகி உலக அறிவியலாளர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆய்வின் மூலம் செல் அறிவியல் மற்றும் மருத்துவம் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இறந்த பன்றியை உயிரோடு எழுப்பிய விஞ்ஞானிகள்.. இனி இறப்பே கிடையாதா? அமெரிக்காவில் நடந்த அறிவியல் புரட்சி !

இறந்த செல்கள் உயிர்பெறுவது என்பது கிட்டத்தட்ட இறந்த உயிருக்கு மீண்டும் உயிர் கொடுப்பது போன்ற செயல் என்பதால் இத்தகைய ஆய்வு மேம்பட்டால் இறப்பே இல்லாத நிலைக்கு மனிதர்களை கொண்டுசெல்லலாம் என அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால், இது போன்ற விஷயங்களால் இறந்த மனிதரை உயிரோடு கொண்டுவர முடிந்தாலும், அவர் கோமாவில் விழுந்த மனிதரை போல நடைபிணமாக மட்டுமே இருப்பார் என சில விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories