உலகம்

“முதலில் உக்ரைன் இப்போது தைவான் - ரஷ்யாவைத் தொடர்ந்து சீனாவை சீண்டும் அமெரிக்கா” : மீண்டும் போர் பதற்றம்!

தைவான் - சீனா எல்லைப் பிரச்சனையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அமெரிக்கா இருநாடுகளிடையே பகைமையை மூட்டிவிடுவதாக அரசியல் விமர்சகர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

“முதலில் உக்ரைன் இப்போது தைவான் - ரஷ்யாவைத் தொடர்ந்து சீனாவை சீண்டும் அமெரிக்கா” : மீண்டும் போர் பதற்றம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கடந்த சில நாட்களாகவே சீனா - தைவாம் இடையான எல்லைப் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனிடையே, அமெரிக்கா நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்நிலையில் சீனா தைவானை நோக்கி ஏவுகனை பயிற்சியினை மேற்கொள்வதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாது தைவான் கடற்பரப்பில் பிரம்மாண்ட போர் ஒத்திகளையில் சீனா ஈடுபட்டு வருகிறது.

தைவான் - சீனா எல்லைப் பிரச்சனையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அமெரிக்கா இருநாடுகளிடையே பகைமையை மூட்டிவிடுவதாக அரசியல் விமர்சகர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். தைவானை தனிநாடாக செயல்பட சீனா அனுமதிக்கவேண்டும் என அமெரிக்காத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

“முதலில் உக்ரைன் இப்போது தைவான் - ரஷ்யாவைத் தொடர்ந்து சீனாவை சீண்டும் அமெரிக்கா” : மீண்டும் போர் பதற்றம்!

சீனா - தைவான் நாட்டின் பூளோக அரசியலை புரிந்துக்கொள்ளாமல் தேவையில்லாமல் கருத்துச் சொல்வது தேவையற்றது என சீனா பதிலடி கொடுத்துள்ளது. இந்நிலையில் தைவானை சீனாவிற்கு எதிராக தொடர்ச்சியாக செயல்பட வைக்கும் போக்கில் அமெரிக்காவின் செயல்பாடுகள் உள்ளது என்பதை நிரூபிக்கும் விதமாக அமெரிக்காவின் நான்சி பெலோசி தைவானுக்குச் சென்றுள்ளார்.

இதனால் தைவானை எச்சரிக்கும் விதமாக சீனா, நான்சி பெலோசி வருகையின் போது தைவான் வான்பரப்பில் 27 போர் விமானங்களை பறக்கவிட்டது. சீனாவின் இத்தகைய செயலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் கண்டனங்களுக்கு இடையே தைவானை சுற்றி உள்ள தீவுகளில் சீனா ராணுவம் பயிற்சி மேற்கொண்டுவருவது கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

“முதலில் உக்ரைன் இப்போது தைவான் - ரஷ்யாவைத் தொடர்ந்து சீனாவை சீண்டும் அமெரிக்கா” : மீண்டும் போர் பதற்றம்!

இந்த ராணுவ நடவடிக்கை குறித்து சீனாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் டான் கெஃபே கூறுகையில், “அமெரிக்க தலைமையிலான நோட்டோ படை உக்ரைனுக்கு உதவி செய்வதுபோல் பேசி, உக்ரைனை நோட்டோ அமைப்பில் சேர வலியுறுத்தியது. அதன் காரணமாக ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்தது.

அதேபோல் தைவானும் தனிநாடு கோரிக்கையை ஆதரிப்பதாக கூறி தைவானில் அமெரிக்காவின் செயல்பாடுகள் இருக்குமாயின் சீனா பதிலடி கொடுக்கும்.” என எச்சரித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories