உலகம்

சாக்லேட் ருசி பார்க்க ரூ.61 லட்சம் சம்பளம்.. பம்பர் ஆஃபர் கொடுத்த சாக்லேட் நிறுவனம்..!

சாக்லேட் ருசி பார்த்து அனுமதி வழங்குவதற்கு ஆள் வேண்டி 61 லட்ச ரூபாய் சம்பளம் நிர்ணயித்து பிரபல சாக்லேட் நிறுவனம் விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.

சாக்லேட் ருசி பார்க்க ரூ.61 லட்சம் சம்பளம்.. பம்பர் ஆஃபர் கொடுத்த சாக்லேட் நிறுவனம்..!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கனடா நாட்டில் பிரபல சாக்லேட் நிறுவனமான 'Candy Funhouse' நிறுவனம் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி அவர்கள் தயாரிக்கும் சாக்லேட்டுகளை ருசி பார்ப்பதற்கென கைத்தேர்ந்த ஆட்களை வேலைக்கு தேவை என்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதற்கு சம்பளமாக ஆண்டுக்கு 1 லட்சம் டாலர் (இந்திய மதிப்பில் 61 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய்) நிர்ணயித்துள்ளது.

சாக்லேட் ருசி பார்க்க ரூ.61 லட்சம் சம்பளம்.. பம்பர் ஆஃபர் கொடுத்த சாக்லேட் நிறுவனம்..!

மேலும் இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

  • இதற்கு 5 வயதுக்கு மேற்பட்டவர்கள் தகுதியுடையவர்கள் ஆவர்.

  • கனடிய குடியிருப்பாளர்கள், வடக்கு அமெரிக்காவைச் சேர்ந்த யாராக இருந்தாலும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

  • Chief Candy Officer-ன் வேலை ஒரு மாதம் சுமார் 3500 சாக்லேட்களை ருசி பார்ப்பது

  • இந்த அனைத்து மிட்டாய்களையும் அங்கீகரிப்பதும், ஒவ்வொரு விருந்துக்கும் அதிகாரப்பூர்வமான Chief Candy Officer (CCO) ஒப்புதல் முத்திரையுடன் வழங்கலாமா, வேண்டாமா என்பதை தீர்மானிக்க வேண்டும்

இது குறித்து அந்த சாக்லேட் நிறுவனம் கூறுகையில், "இந்த வேலைக்கு வருபவர்கள், வாழ்க்கையின் சவாலான சவாரிக்கு தயாராக இருங்கள், நாடி நரம்புகளில் சாக்லேட்டுகள் பாய்வதையும் உணருவார்கள்" என்றன.

இந்த சாக்லேட் நிறுவனம் வெளியிட்ட வேலைக்கு வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கனடா நாட்டின் டொரன்டோ பகுதியில் இருக்கும் இந்த 'Candy Funhouse' நிறுவனம் கனடாவின் மிகப்பெரிய ஆன்லைன் Candy ஷாப் ஆகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories