உலகம்

AIR Plane-களுக்கு இனி GOOD BYE - 5 வருடத்தில் வானத்தை ஆள வருகிறது ஆகாய விமானங்கள்!

நவீன ரக விமானங்களுக்கு பதிலாக ஆகாய கப்பல்களை அறிமுகம் செய்யவிருப்பதாக ஐரோப்பிய நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

AIR Plane-களுக்கு இனி GOOD BYE  -  5 வருடத்தில் வானத்தை ஆள வருகிறது ஆகாய விமானங்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தற்போதைய நவீன விமானங்களின் வருகைக்கு முன்னர் ஆகாய கப்பல்கள் என்று அழைக்கப்படும் விமானங்கள் ஆதிக்கம் செலுத்தின. ஆகாய கப்பலில் உள்ள ஹீலியம் மூலம் பறக்கும் இந்த வகை விமானங்கள் இரண்டாம் உலக போர் வரை வானில் பறந்தன.

இந்த நிலையில் அந்த வகை விமானங்களை மீண்டும் பறக்கவைக்க தற்போது மீண்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இதற்கான சோதனைகள் நடந்துவரும் நிலையில், இன்னும் 4 ஆண்டுகளில் ஐரோப்பாவில் ஆகாய கப்பல்கள் சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

AIR Plane-களுக்கு இனி GOOD BYE  -  5 வருடத்தில் வானத்தை ஆள வருகிறது ஆகாய விமானங்கள்!

தற்போது வானில் பறக்கும் விமானங்கள் அதிக அளவில் கார்பனை வெளியே விடுவதால் சுற்றுசூழல் பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது. எனவே இதனை தடுக்க கார்பன் உமிழ்வை குறைக்கும் நோக்கில் ஆகாய கப்பலுக்கு மீண்டும் உயிர்கொடுக்கும் முயற்சிகள் தொடங்கியுள்ளன.

'hybrid air vehicles' என்ற பிரிட்டிஷ் நிறுவனம் இந்த முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. முந்தைய ஆகாய கப்பல்களின் சாதகமான அம்சங்களையும் தற்போது உள்ள தொழிநுட்பங்களையும் ஒருங்கிணைத்து புதிய வகனை ஆகாய விமானங்களை இந்த நிறுவனம் உருவாகியுள்ளது.

AIR Plane-களுக்கு இனி GOOD BYE  -  5 வருடத்தில் வானத்தை ஆள வருகிறது ஆகாய விமானங்கள்!

இதே போல ஸ்பெயினை சேர்ந்த air nostrum என்ற நிறுவனமும் இதற்கான சோதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த வகை விமானம் நவீன ரக விமானத்தை விட குறைவான வேகத்திலே செல்லும் என்றாலும், இயற்கைக்கு பாதுகாப்பாக இருக்கும் என்பதால் இதை இயக்க பல்வேறு நாடுகளும் ஆர்வம் காட்டுகின்றன.

banner

Related Stories

Related Stories