உலகம்

"ஒரே அலை தான்.. பார்ட்டி மொத்தமும் க்ளோஸ்.." - திருமணத்திற்கு விருந்தாளியாக வந்த பேரலை: வைரலாகும் வீடியோ!

கடற்கரை ஓரத்தில் ஏற்பாடு செய்திருந்த திருமண நிகழ்ச்சியில், திடீரென ஒரு பேரலை புகுந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

"ஒரே அலை தான்.. பார்ட்டி மொத்தமும் க்ளோஸ்.." - திருமணத்திற்கு விருந்தாளியாக வந்த பேரலை: வைரலாகும் வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

அமெரிக்காவை சேர்ந்த டிலான் மற்றும் ரிலே மர்பி என்ற ஜோடி கடற்கரையில் தங்கள் திருமண வரவேற்பை கொண்டாட விரும்பியுள்ளனர். அதன்படி கடந்த சனிக்கிழமை அங்கிருக்கும் ஹவாய் தீவில் அதற்கான ஏற்பாடுகளை மும்முரமாக செய்து விருந்தினர்களுக்கு அழைப்பும் விடுத்திருந்தனர்.

அங்கு வந்த விருந்தினர்கள், கடற்கரை ஓரத்தில் ஏற்பாடு செய்திருந்த பார்ட்டியை அனுபவித்தவாறே அலைகளை ரசித்து கொண்டிருந்தனர்.

"ஒரே அலை தான்.. பார்ட்டி மொத்தமும் க்ளோஸ்.." - திருமணத்திற்கு விருந்தாளியாக வந்த பேரலை: வைரலாகும் வீடியோ!

அப்போது எதிர்பாரா விதமாக அங்கே பேரொலியுடன் அலை ஒன்று வந்தது. அந்த அலையை ரசித்தவாறு நின்று விருந்தினர்கள், பெரிய அலை வருவதை வாயை பிழந்து ஆச்சர்யத்தில் பார்த்துக்கொண்டிருந்தனர்.

அவர்கள் சுதாரிப்பதற்குள் அந்த அலை உள்ளே நுழைந்ததில், அங்கிருந்த டேபிள், சேர் உள்ளிட்ட அனைத்தும் கடல் அலையால் கவிழ்ந்தது. மேலும் ஏற்பாடு செய்திருந்த பார்ட்டி அனைத்தும் பாழாய் போனது.

இந்த அலையானது கிழக்கு பசிபிக் பகுதியில் ஏற்பட்டிருந்த டார்பி புயலின் காரணமாக இருக்கலாம் கூறப்படுகிறது. 3 கட்ட ஆபத்தான புயலாக டார்பி வகைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், இருவரின் திருமணமும் திட்டமிட்டபடி நடைபெற்றிருக்கிறது.

இந்த நிலையில், இது தொடர்பான வீடியோ வெளியாக சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories