
தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தைச் சேர்ந்த 33 வயது நபர் ஒருவர் சிறுநீர் கழிக்கும் போது ரத்தம் வருவதாக கூறி மருத்துவரை சென்று பார்த்துள்ளார். உடனே அவருக்கு பலகட்ட சோதனை செய்த மருத்துவர்கள் பின்னர் குரோமோசோம் பரிசோதனைக்கு உட்படுத்தினர்.
அதன் முடிவில், உயிரியல் ரீதியாக அவர் பெண்ணாக இருக்கிறார் என்ற அதிர்ச்சி தகவல் மருத்துவர்களுக்கு தெரியவந்துள்ளது.

மேலும், அவருக்கு பெண்ணுக்குண்டான பாலியல் குரோமோசோம்கள் இருப்பதும், பெண்ணுக்கான கருப்பை உள்ளிட்ட இனப்பெருக்க உறுப்புகளும் இருப்பது தெரியவந்திருக்கிறது.
தொடர்ந்த ஆய்வில், அவருக்கு ஆண்களுக்கான ஆண்ட்ரோஜனின் அளவு சராசரிக்கும் குறைவாகவும், பெண் பாலின ஹார்மோன்கள் மற்றும் கருப்பை செயல்பாடுகளின் அளவு ஆரோக்கியமான வயது வந்த பெண்களுக்கு இருப்பதைப் போலவும் இருந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக அவருக்கு இந்த மாதவிடாய் பிரச்சனை இருந்துள்ளது.

இதன் பின்னர் அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு கருப்பை அகற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக கூறியுள்ள மருத்துவர்கள், அவரால் பிறரைப் போல இனப்பெருக்கத்தில் ஈடுபடவோ, அல்லது விந்தணுக்களை உற்பத்தி செய்யவோ முடியாது என கூறியுள்ளனர்.








