உலகம்

மீனவர் வலையில் சிக்கிய விசித்திர மீன்! இப்படி ஒரு மீன் இருக்கிறதா என மீனவர்கள் ஆச்சரியம்!

விகாரமான உருவம் கொண்ட ஒரு ஆழ்கடல் மீன் ஒன்று மீனவர் வலையில் சிக்கியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மீனவர் வலையில் சிக்கிய விசித்திர மீன்! இப்படி ஒரு மீன் இருக்கிறதா என மீனவர்கள் ஆச்சரியம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஹாலிவுட் படங்களில் வித்தியாசமாக விலங்குகளை காட்டுவார்கள். அவற்றில் சில பார்க்க விசித்திரமாகவும், நமது பார்வைக்கு அலங்கோலமாகவும் காட்சியளிக்கும்.

அதேபோன்ற உயிரினங்கள் சில நேரம் நிஜத்திலும் கண்டுபிடிக்கப்பட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும். அதேபோன்ற ஓர் நிகழ்வு இப்போது நடந்துள்ளது.

மீனவர் வலையில் சிக்கிய விசித்திர மீன்! இப்படி ஒரு மீன் இருக்கிறதா என மீனவர்கள் ஆச்சரியம்!

ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்மகுய் என்னும் கடற்கரையோரம் உள்ள நகரில் வசிக்கும் ஜேசன் என்பவர் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது அவரின் வலையில் புதிய வகை மீன் ஒன்று சிக்கியுள்ளது. இது என்ன மீன் என்று அறியாத அவர் இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் இந்த மீனின் புகைப்படத்தை பகிர்ந்துள்ள அவர் தனது வாழ்க்கையில் இதுவரை கண்டிராத "அசிங்கமான மீன்" என்று கூறியுள்ளார். மேலும் இது ஒரு ப்ளாப்ஃபிஷ் வகையாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

மீனவர் வலையில் சிக்கிய விசித்திர மீன்! இப்படி ஒரு மீன் இருக்கிறதா என மீனவர்கள் ஆச்சரியம்!

இந்த மீன் கடலின் சுமார் 540 மீட்டர் ஆழத்தில் கண்டறியப்பட்டது எனவும் சுமார் 4 கிலோ எடையுடன் இது இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது சைக்ரோலுடிடே குடும்பத்தைச் சேர்ந்தவை எனவும் ஆழ்கடலில் வாழும் மீன்கள் எனவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தின் ஆழ்கடல் பகுதியில் இந்த வகை மீன்கள் வாழ்கிறது எனவும் சில நேரம் ஆழ்கடலில் இருந்து வெளியேறலாம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories