உலகம்

சாக்கடை கழிவு நீரில் தயாரான பீர் - முண்டியடித்து கொண்டு வாங்கும் பொதுமக்கள் : எங்கு தெரியுமா?

சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரில் தயாரான பீருக்கு அதிக வரவேற்பு இருப்பதாக அந்நிறுவம் கூறியுள்ளது.

சாக்கடை கழிவு நீரில் தயாரான பீர் - முண்டியடித்து கொண்டு வாங்கும் பொதுமக்கள் : எங்கு தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உலக அளவில் மதுபானத்துக்கு எப்போதும் அதிக வரவேற்பு இருக்கிறது. அந்த மதுபானத்தில் 90 சதவீதம் இருப்பது தண்ணீர்தான். இதன் காரணமாக பீர் உள்ளிட்ட மதுபான உற்பத்திக்கு தண்ணீர் அத்தியாவசியமாக இருக்கிறது.

அதேநேரம் மதுபானத்துக்கு அதிக அளவில் தண்ணீர் தேவைப்படுவதால் அந்த பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடும் ஏற்படுகிறது. இந்த நிலையில் இந்த பிரச்சனைக்கு சிங்கப்பூர் அரசு ஒரு வழிமுறையை கண்டுபிடித்துள்ளது.

சாக்கடை கழிவு நீரில் தயாரான பீர் - முண்டியடித்து கொண்டு வாங்கும் பொதுமக்கள் : எங்கு தெரியுமா?

அதன்படி ஒரு முறை பயன்படுத்தி வெளியேறும் கழிவுநீரை மதுபான வகைகளில் ஒன்றான பீர் தயாரிப்புக்கு பயன்படுத்தியுள்ளது. அதாவது சிங்கப்பூர் நீர் விநியோக சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பம்ப் செய்யப்பட்டு அதன்பின், வடிகட்டப்பட்ட சுத்தமான நீரை கொண்டு இந்த பீர் தயாரிக்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் 'REVERSE OSMOSIS' என்று அழைக்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த வகை பீருக்கு அமோக வரவேற்பு இருப்பதாக தயாரிப்பு நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த பீர் விற்பனைக்கு வந்ததும் முந்தைய விற்பனையை விட தற்போதைய விற்பனை அதிகரித்துள்ளது எனவும், மக்கள் இது போன்ற புதுமையை விரும்புகிறார்கள் எனவும் அந்நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

சாக்கடை கழிவு நீரில் தயாரான பீர் - முண்டியடித்து கொண்டு வாங்கும் பொதுமக்கள் : எங்கு தெரியுமா?

இந்த புதுவகை தயாரிப்பு மூலம் சிங்கப்பூர் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை குவிக்க முடியும் என கூறப்படுகிறது. மேலும், மறுசுழற்சி செய்யப்பட்ட கழிவு நீரை கொண்டு, சிங்கப்பூரின் தண்ணீர் தேவையில் 40 சதவீதத்தை பூர்த்தி செய்ய முடியும் என சிங்கப்பூர் தண்ணீர் வாரியம் கூறியுள்ளது.

banner

Related Stories

Related Stories