உலகம்

WhatsApp வதந்தியால் நடந்த விபரீதம்.. நடுரோட்டில் அரசியல் ஆலோசகர் உயிருடன் எரித்து கொலை: பகீர் சம்பவம்!

வாட்ஸ் ஆப் வதந்தியை நம்பி அரசு அதிகாரியை நடுரோட்டில் தீ வைத்துக் கொளுத்திய பயங்கர சம்பவம் மெக்சிகோவில் அரங்கேறியுள்ளது.

WhatsApp வதந்தியால் நடந்த விபரீதம்.. நடுரோட்டில் அரசியல் ஆலோசகர் உயிருடன் எரித்து கொலை: பகீர் சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகம் முழுவதும் Twitter, WhatsApp போன்ற சமூக வலைதளங்கள் வந்த பிறகு போலியான செய்திகள் மற்றும் வதந்தியான தகவல்கள் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது. இதைப் பலர் உண்மையை நம்பியதால் பல விபரீதமான நிகழ்வுகளும் நடப்பது வாடிக்கையாகி வருகிறது.

இந்த வதந்திகளை தடுப்பதற்காக சமூக வலைதள நிறுவனங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் இவற்றை முழுமையாகத் தடுக்க முடியவில்லை. இந்நிலையில் போலியான வதந்தி செய்தியால் அதிகாரி ஒருவர் மெக்சிகோவில் உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெக்சிகோ நாட்டில் அரசியல் ஆலோசகராக இருந்தவர் டேனியல் பிகாசோ. 31 வயது இளம் அரசியல் அதிகாரியான இவர் குழந்தை கடத்தல் காரர் என WhatsApp குழுவில் போலியாகச் செய்தி ஒன்று பகிரப்பட்டுள்ளது. இந்த செய்தியைப் பார்த்த பலர் உண்மை என நம்பியுள்ளனர்.

இதனால் டேனியில் பிகாசோவை நடுரோட்டில் வைத்து 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இது பற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் பொதுமக்களிடம் இருந்து அவரை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதையடுத்து போலிஸார் கண்முன்னே டேனியல் பிகாசோவை நடுரோட்டிலேய உயிருடன் தீ வைத்துக் கொளுத்தியுள்ளனர்.

இந்த கொடூர சம்பவம் உலக நாடுகள் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது காட்டுமிராண்டித்தனம். நீதியல்ல” என மெக்சிகோ நாட்டு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories