உலகம்

“சைமண்ட்ஸின் கடைசி நிமிடங்கள்.. வளர்ப்பு நாய் செய்த காரியம் தெரியமா?” : நேரில் பார்த்த பெண் உருக்கம்!

சைமண்ட்ஸ் விபத்தில் சிக்கிய போது நேரில் பார்த்த பெண் ஒருவர் என்ன நடந்தது என்பது குறித்து சாட்சியம் அளித்துள்ளார்

“சைமண்ட்ஸின் கடைசி நிமிடங்கள்.. வளர்ப்பு நாய் செய்த காரியம் தெரியமா?” : நேரில் பார்த்த பெண் உருக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கடந்த சில நாட்களுக்கு முன்பு கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் சோகத்தில் தள்ளியது. இந்தநிலையில், அவரின் கடைசி நிமிடத்தில் என்ன நடந்தது என்து குறித்து நேரில் பார்த்த பெண் ஒருவர் சாட்சி அளித்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஜாம்பவனாக வலம் வந்தவர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ். சுமார் 200 ஒரு நாள் போட்டி, 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய சைமண்ட்ஸ் 133 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இண்டர்நேஷனல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு சைமண்ட்ஸ், தனியார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் வர்ணனையாளராக பணியாற்றி வந்தார்.

இந்தநிலையில், தன்னுடைய 2 வளர்ப்பு நாய்களுடன் குயின்ஸ்லேண்டில் உள்ள ஆலிஸ் ரிவர் பிரிட்ஜில் காரில் பயணம் செய்துக் கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் சைமண்ட்ஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனிடையே சைமண்ட்ஸ் விபத்தில் சிக்கிய போது நேரில் பார்த்த பெண் ஒருவர் என்ன நடந்தது என்பது குறித்து சாட்சியம் அளித்துள்ளார்.

“சைமண்ட்ஸின் கடைசி நிமிடங்கள்.. வளர்ப்பு நாய் செய்த காரியம் தெரியமா?” : நேரில் பார்த்த பெண் உருக்கம்!

இதுகுறித்து அந்தப் பெண் கூறுக்கையில், “விபத்து ஏற்பட்டு காரின் என்ஜின் ஓடிக் கொண்டிருந்தது, காரில் ரேடியோவும் பாடிக் கொண்டிருந்தது. 2 நிமிடங்கள் கழித்து தான் உள்ளே இருந்தது சைமண்ட்ஸ் என எனக்கு தெரிந்தது. ஆனால் காரில் இருந்த 2 நாய்களும் உயிரோடு தான் இருந்தன. நானும் எனது கணவரும் சைமண்ட்ஸை வெளியே இழுக்க முயற்சித்த போது, அவரது செல்ல நாய்களில் ஒன்று உறுமியது. சைமண்ட்ஸ்க்கு உயிர் இருந்தது. ஆனால் நாடித்துடிப்பு காட்டவில்லை. அவரும் எதற்கும் பதில் அளிக்கவில்லை” எனக் கூறினார். அதுமட்டுமின்றி கார் பல முறை உருண்டு போய் விழுந்ததாகவும் கூறினார்.

சைமண்ட்ஸ் உயிரிழந்ததை அறியாத செல்லப் பிராணிகள் அவரை யாரும் எதுவும் செய்துவிடக் கூடாது என்பதற்காக பாதுகாத்தது அனைவரின் நெஞ்சையும் வருடிச் செல்கிறது. இந்த ஆண்டு ஏற்கனவே ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களான சுழல் ஜாம்பவாமன் ஷேன் வார்னே மற்றும் ராட் மார்ஷ் இழப்பையே தாங்கிக்கொள்ள முடியாத கிரிக்கெட் உலகம், சைமண்ட்ஸின் இந்த இழப்பால் மீண்டும் துவண்டு போயுள்ளது.

banner

Related Stories

Related Stories