உலகம்

மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு விடுமுறை.. ஸ்பெயின் அரசு அதிரடி: பெண்கள் வரவேற்பு!

ஜெர்மனியில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்போது பணவிக்கம் அதிகரித்துள்ளது.

மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு விடுமுறை.. ஸ்பெயின் அரசு அதிரடி: பெண்கள் வரவேற்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

1) ஸ்பெயின் நாட்டில் பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் விடுமுறை!

ஸ்பெயின் நாட்டில் வசிக்கும் பெண்கள், தங்கள் மாதவிடாயின் போது மாதத்தில் 3 நாட்களுக்கு விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்ற சிறந்த அறிவிப்பினை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது. பெண்களின் மாதவிடாய் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான பிற நடவடிக்கைகளை உள்ளடக்கிய இந்த சீர்திருத்தம், வரும் செவ்வாய்கிழமை அன்று நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றப்படும் என தெரிகிறது. இந்த முடிவை இதுவரை எந்த ஐரோப்பிய நாடுகளும் எடுத்ததில்லை. இந்த பெருமையை தட்டிச் சென்ற ஒரே ஐரோப்பிய நாடு ஸ்பெயின் தான்.

மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு விடுமுறை.. ஸ்பெயின் அரசு அதிரடி: பெண்கள் வரவேற்பு!

2) ஜெர்மனியில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவு பணவீக்கம் அதிகரிப்பு!

ஜெர்மனியில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்போது பணவிக்கம் அதிகரித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் ஜெர்மனியில் எரிபொருள் விலை 35.3 சதவீதம் உயர்ந்துள்ளது. அதே சமயம் உணவு பொருட்களின் விலை கடந்த ஆண்டை விட 8.5 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தது முதல் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்துள்ளதால், ஜெர்மனியில் எரிபொருள் விலை உயர்வு ஏற்பட்டு பணவீக்கத்தில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டின் மத்திய புள்ளி விவர அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

3) ஹிட்லரை விட ஆபத்தானவர் புதின்: போலந்து பிரதமர்!

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷிய அதிபர் புதின் பற்றி போலந்து பிரதமர் மேட்யூஸ் மொராவீக்கி ‘தி டெலகிராப்’ பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதி உள்ளார். அதில் அவர், “புதின், ஹிட்லரும் அல்ல, ஸ்டாலினும் அல்ல. ஆனால் துரதிர்ஷ்டவசமாக மிகவும் ஆபத்தானவர். உக்ரைனில் புச்சா, இர்பின், மரியுபோல் நகரங்களின் தெருக்கள் அப்பாவி மக்களின் ரத்தத்தால் ஓடின. இது ஸ்டாலின் மற்றும் ஹிட்லரின் சபிக்கப்பட்ட சித்தாந்தங்கள் திரும்புவதைக் குறிக்கிறது. 20-ம் நூற்றாண்டின் கம்யூனிசத்தையும், நாஜிசத்தையும் போன்று புதின் உருவாக்க மேற்கத்திய நாடுகள் அனுமதித்து விட்டன. கீவில் ரஷியா தாக்குதலை நிறுத்தாது என்பதால் நாம் நமது ஆன்மாவை, சுதந்திரத்தை, இறையாண்மையை இழப்போம்” என கூறி உள்ளார்.

மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு விடுமுறை.. ஸ்பெயின் அரசு அதிரடி: பெண்கள் வரவேற்பு!

4) இலங்கை பயணத்தை தவிருங்கள்: சிங்கப்பூர்

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், அந்நாட்டிற்கு அத்தியாவசியமற்ற பயணங்களையும், பயணத்தையும் தவிர்க்க வேண்டும் என சிங்கப்பூர் அரசு, தனது நாட்டு மக்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளது.

5) 'அல்ஜசீரா' செய்தியாளர் துப்பாக்கிசூட்டில் பலி

இஸ்ரேல்-, பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது. சர்ச்சைக்குரிய மேற்கு கரை பகுதியில் பாலஸ்தீனர்கள் இஸ்ரேலியர்களை தாக்குவதும், அவர்களை இஸ்ரேல் போலீசார் மற்றும் ராணுவத்தினர் சுட்டுக்கொல்வதும் வாடிக்கையான சம்பவமாகிவிட்டது. இந்நிலையில், அல்ஜசீரா ஊடகத்தின் மூத்த செய்தியாளர் ஷிரீன் அபு அக்லா, 51, மேற்கு கரையின் ஜெனின் நகரில் உள்ள அகதிகள் முகாமில் செய்தி சேகரிக்க சென்றார். அப்போது, இஸ்ரேல் படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில், அவர் தலையில் குண்டு பாய்ந்து உயிரிழந்ததாக பாலஸ்தீன சுகாதாரத்துறை தெரிவித்தது. செய்தியாளர்களுக்கான பிரத்யேக கறுப்பு நிற, 'ஜாக்கெட்' அணிந்திருந்தும் அத்துமீறி அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்தனர்.

banner

Related Stories

Related Stories