உலகம்

இம்ரான் கானின் சர்ச்சை பேச்சு : கப்பலில் இருந்து ஏவுகணை சோதனை.. வட கொரியாவின் அடுத்த அதிரடி! #5IN1_WORLD

வடகொரியா மீண்டும் ஒரு ஏவுகணையை பரிசோதனை செய்துள்ளதாக தென் கொரியா கூறியுள்ளது.

இம்ரான் கானின் சர்ச்சை பேச்சு :  கப்பலில் இருந்து ஏவுகணை சோதனை.. வட கொரியாவின் அடுத்த அதிரடி! #5IN1_WORLD
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

1.) பிரிட்டன் உள்ளாட்சி தேர்தல் : ஆளுங்கட்சிக்கு தோல்வி!

பிரிட்டன் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வியாழக்கிழமை தோ்தல் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்ற நிலையில், பல முக்கிய தொகுதிகளில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி தோல்வி அடைந்தது. லண்டனின் மையத்தில் அமைந்துள்ள வெஸ்ட்மின்ஸ்டா் உள்ளிட்ட கன்சா்வேடிவ் கட்சியின் பாரம்பரிய கவுன்சில்கள் உள்பட பல்வேறு முக்கிய தொகுதிகளில் அந்தக் கட்சி தோல்வியடைந்தது. பிரிட்டனின் முக்கிய எதிா்க்கட்சியான தொழிலாளா் கட்சி அந்த இடங்களைக் கைப்பற்றியது. தனது கட்சி வெற்றிப்பாதைக்குத் திரும்பியுள்ளதை இந்தத் தோ்தல் உணா்த்துவதாக தொழிலாளா் கட்சித் தலைவா் சா் கோ் ஸ்டாா்மா் கூறினாா்.

2) கியூபா ஓட்டலில் வெடி விபத்து - உயிரிழப்பு 22 ஆக உயர்வு!

கியூபா நாட்டின் தலைநகர் ஹவானாவில் சரடோகா என்ற நட்சத்திர ஓட்டல் உள்ளது. 86 அறைகள் கொண்ட இந்த ஓட்டலில் புதுப்பிக்கும் பணி நடந்து வந்தது. இந்த நிலையில் ஓட்டலில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஓட்டல் கட்டிடம் சேதமடைந்து இடிந்து விழுந்தது. இயற்கை எரிவாயு செல்லும் குழாயில் கசிவு ஏற்பட்டு வெடித்து சிதறியது தெரிய வந்தது.

இம்ரான் கானின் சர்ச்சை பேச்சு :  கப்பலில் இருந்து ஏவுகணை சோதனை.. வட கொரியாவின் அடுத்த அதிரடி! #5IN1_WORLD

3) நீழ்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணை சோதனை... வட கொரியாவின் அடுத்த அதிரடி!

வடகொரியா மீண்டும் ஒரு ஏவுகணையை பரிசோதனை செய்துள்ளதாக தென் கொரியா கூறியுள்ளது. இந்த ஆண்டில் வடகொரியாவின் 15-வது ஏவுகணை சோதனை இதுவாகும். ஜப்பான் கடல்பகுதியை ஒட்டியுள்ள கடல் பகுதியில், நீர்மூழ்கி கப்பலில் இருந்து பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியிருப்பதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.

ஆனால் ஏவுகணை எவ்வளவு தூரம் சென்றது என்ற தகவல் வெளியிடப்படவில்லை. வட கொரியாவின் ஏவுகணை சோதனையை ஜப்பான் ராணுவ அமைச்சகமும் உறுதி செய்துள்ளது. எந்தவிதமான சூழ்நிலைகளையும் கையாள்வதற்கு தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும், விமானங்கள் மற்றும் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு ஜப்பான் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

இம்ரான் கானின் சர்ச்சை பேச்சு :  கப்பலில் இருந்து ஏவுகணை சோதனை.. வட கொரியாவின் அடுத்த அதிரடி! #5IN1_WORLD

4) நேபாளத்தில் காஞ்சன் ஜங்கா மலையில் ஏறிய இந்தியர் பலி

நேபாளத்தில் உள்ள காஞ்சன் ஜங்கா மலை இந்திய எல்லையில் அமைந்துள்ளது. 8,200 மீட்டர் உயரம் கொண்ட இந்த மலை உலகின் 3-வது உயரமான மலையாகும். இங்கு ஏராளமான மலையேறும் வீரர்கள் மலை ஏறி வருகிறார்கள். இந்த நிலையில் காஞ்சன் ஜங்கா மலையில் ஏறிய இந்தியர் உயிரிழந்துள்ளார். மகாராஷ்டிராவை சேர்ந்த நாராயணன் அய்யர் (52) என்பவர் காஞ்சன் ஜங்கா மலையில் ஏறினார். மலை உச்சியில் அருகே நாராயணன் அய்யர் சென்றபோது திடீரென்று இறந்தார். உடல்நல குறைவு காரணமாக அவர் மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

5) கழுதை கழுதையாக தான் இருக்கும் - வைரலான இம்ரான் கானின் பேச்சு!

முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் பேசிய அவர், பிரிட்டனில் அவர் வாழ்ந்த நாட்களை நினைவுக்கூர்ந்தார். என்னை பிரிட்டன் நன்கு அரவணைத்தது. எனக்கும் பிரிட்டன் மிகவும் பிடித்த நாடாக இருந்தது. ஆனால் பிரிட்டனை நான் எனது வீடாக கருதியதில்லை. நான் முதலில் பாகிஸ்தானி தான். கழுதையை அழைத்து வந்து கருப்பு, வெள்ளை நிறத்தை பூசினால் அது வரிக்குதிரையாகி விடாது. கழுதை கழுதையாகத்தான் இருக்கும் என கூறினார்.

banner

Related Stories

Related Stories