உலகம்

தேர்தலில் வெற்றி பெற்ற அடுத்த நாளே.. பிரான்ஸ் அதிபர் மேக்ரான் மீது தக்காளி வீச்சு! #5IN1_WORLD

பிரான்ஸ் அதிபர் மேக்ரான் மீது தக்காளி வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தலில் வெற்றி பெற்ற அடுத்த நாளே.. பிரான்ஸ் அதிபர் மேக்ரான் மீது தக்காளி வீச்சு! #5IN1_WORLD
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

1) ரூபிளில் வர்த்தகம் செய்ய 10 ஐரோப்பிய நாடுகள் சம்மதம்- ரஷியா அறிவிப்பு!

10 ஐரோப்பிய எரிவாயு நிறுவனங்கள் ரஷியாவிடம் இருந்து ரூபிளில் எரிவாயு வர்த்தகத்தை மேற்கொள்ள சம்மதித்துள்ளதாக ரஷிய எரிவாயு நிறுவனம் கேஸ்ப்ரோம் தெரிவித்துள்ளது. இதில் 4 நிறுவனங்கள் ஏற்கனவே ரூபிளில் கட்டணத்தை செலுத்தி விட்டன. இவர்களுக்கு விரைவில் எரிவாயு விநியோகம் செய்யப்படும். ரூபிள் வர்த்தகத்திற்கு சம்மதிக்காத நாடுகளுக்கு விற்பனை நிறுத்தப்படும் என கூறியுள்ளது. பல்கேரியா மற்றும் போலாந்து ஆகிய நாடுகளுக்கு எரிபொருள் விநியோகத்தை வழங்குவதை ரஷ்யா நிறுத்துவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

2) அமெரிக்காவில் ஓட்டல் அதிபர் உள்பட 4 பேர் சுட்டுக்கொலை!

அமெரிக்காவின் மிசிசிப்பி பகுதியில் பிராட்வே இன் எக்ஸ்பிரஸ் ஓட்டலில் மர்ம நபர் ஒருவர் வந்து திடீரென கையில் வைத்திருந்த துப்பாக்கியால் ஓட்டலில் இருந்தவர்கள் மீது சரமாரியாக சுட்டான். இதில் 4 பேர் இறந்தனர். துப்பாக்கி சத்தம் கேட்டு அருகில் இருந்த போலீசார் அங்கு விரைந்து வந்தனர். போலீசாரை பார்த்ததும் மர்ம ஆசாமி ஓட்டலில் இருந்த ஒரு அறைக்குள் புகுந்தான். உடனே போலீசார் அவன் மீது துப்பாக்கியால் சுட்டனர். அதில் அவன் குண்டு பாய்ந்து இறந்தான். விசாரணையில் அவனது பெயர் ஜெர்மி அலே சுந்தர் என்பது தெரியவந்தது.

தேர்தலில் வெற்றி பெற்ற அடுத்த நாளே.. பிரான்ஸ் அதிபர் மேக்ரான் மீது தக்காளி வீச்சு! #5IN1_WORLD

3) இலங்கையில் இடைக்கால அரசு அமைக்க கோத்தபய ராஜபக்சே முடிவு!

இலங்கையில் அனைத்துக்கட்சிகளும் பங்கேற்கும் இடைக்கால அரசு அமைக்க அதிபர் கோத்தபய ராஜபக்சே முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக வெள்ளிக்கிழமை ஆலோசனை கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் கொண்ட கட்சிகளின் தலைவர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், நாடு தற்போது எதிர்கொண்டு வரும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அனைத்துக்கட்சி அரசுக்கு கொள்கை அளவில் ஒப்புக்கொண்டிருப்பதாக கூறியுள்ளார். இந்த அனைத்துக்கட்சி அரசின் வடிவம் குறித்து பிரதமர் மகிந்த ராஜபக்சே தலைமையிலான மந்திரிசபை விவாதித்து முடிவு எடுக்குமாறு அறிவுறுத்தி உள்ளார் கோத்தபய ராஜபக்சே.

4) பிரான்ஸ் அதிபர் மேக்ரான் மீது தக்காளி வீச்சு!

கடந்த 24ம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடந்தது. இதில் இமானுவேல் மேக்ரான் 58 சதவீதத்துக்கு மேல் ஓட்டுகள் பெற்று மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், தேர்தல் வெற்றியை கொண்டாட வேண்டி அதிபர் மேக்ரான் பாரிசின் வடமேற்கில் உள்ள செர்ஜி பகுதியில் பொதுமக்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது அவர் மீது குறிவைத்து தக்காளி வீசப்பட்டது. இதைக் கண்டு சுதாரித்த பாதுகாவலர்கள் குடையை விரித்து மேக்ரானை அங்கிருந்து பத்திரமாக அழைத்துச் சென்றனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

5) “இம்ரான் கான் தனது ஆட்சியை தக்கவைக்க ராணுவத்திடம் கெஞ்சினார்” - மர்யம் நவாஸ்!

லாகூரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் மரியம் நவாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தனது பிரதமர் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள ராணுவத்திடம் உதவி கேட்டு கெஞ்சியதாகவும், ஆனால் ராணுவம் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டதாகவும் கூறினார். நம்பிக்கையில்லா தீர்மானத்தன்போது தன்னைக் காப்பாற்ற பாகிஸ்தான் மக்கள் கட்சி இணைத் தலைவர் ஆசிஃப் அலி ஜர்தாரியிடமும் இம்ரான் கான் கெஞ்சியதாகவும் மர்யம் நவாஸ் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories