உலகம்

உலகையே ஆட்டிப்படைக்க பின்லேடன் போட்ட திட்டம்.. ரகசிய தகவல் வெளியீடு! #5in1_World

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள தமிழ் இருக்கைக்கு தலைமைப் பேராசிரியராக Martha Ann Selby நியமிக்கப்பட்டுள்ளார்.

உலகையே ஆட்டிப்படைக்க பின்லேடன் போட்ட திட்டம்.. ரகசிய தகவல் வெளியீடு! #5in1_World
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

1) ஹார்வர்டு தமிழ் இருக்கைக்குப் பேராசிரியர் தேர்வு!

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள தமிழ் இருக்கைக்கு தலைமைப் பேராசிரியராக Martha Ann Selby நியமிக்கப்பட்டுள்ளார். இவர், திலிப்குமார் எழுதிய தமிழ்ச் சிறுகதை தொகுப்பினை ஆங்கிலத்தில் ‘Cat in the Agraharam and other stories' எனும் தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார். மார்த்தா ஆன் செல்பி வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கைத் துறையில் ‘Sangam Professor of South Asian Studies’ என்கிற புதிய கல்விப் புலப் பணியில் இணையவிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

உலகையே ஆட்டிப்படைக்க பின்லேடன் போட்ட திட்டம்.. ரகசிய தகவல் வெளியீடு! #5in1_World

2) பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு புதிய பாஸ்போர்ட்

நவாஸ் ஷெரீப்புக்கு புதிய பாஸ்போர்ட் ஒன்றை பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு வழங்கியுள்ளது. இதன்படி, வருகிற 2032-ஆம் ஆண்டு ஏப்ரல் வரை இந்த புதிய பாஸ்போர்ட் செல்லுபடியாகும். நவாஸ் ஷெரீப் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. அவர் அந்த நாட்டில் இருந்து தப்பி லண்டனில் வசித்து வருகிறார். அவருக்கு எதிராக வழக்குகளும் நடந்து வருகின்றன. கடந்த ஆண்டு பிப்ரவரியில் நவாஸின் பாஸ்போர்ட் காலாவதியான பின்பு, இம்ரான் கானின் அரசு அதனை புதுப்பிக்க மறுப்பு தெரிவித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

3) அமெரிக்க பொருளாதாரம் தன் கைக்குள் இருக்க திட்டமிட்ட பின்லேடன்: ரகசிய தகவல் வெளியீடு

அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின்னர் 2-வது தாக்குதல் ஒன்றையும் நடத்த ஒசாமா பின்லேடன் திட்டமிட்ட ரகசிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது. பின்லேடனை உயிருடனோ அல்லது சுட்டு பிடிப்பதற்கான பணிக்காக அமெரிக்காவின் நேவி சீல் படையை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் கொண்ட குழுவானது, பின்லேடனை கொன்ற பின்பு ஆயிரக்கணக்கான பக்கங்களை கொண்ட தனிப்பட்ட கடிதங்கள் மற்றும் குறிப்புகளை கைப்பற்றி வகைப்படுத்தியுள்ளன. இவற்றை ஆய்வு செய்த இஸ்லாமிய பெண் பண்டிதரான நெல்லி லகோத் பேட்டி ஒன்றில், செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பின் அமெரிக்க பொருளாதாரம் தனது கைக்குள் இருக்க வேண்டும் என்று பின்லேடன் விரும்பியுள்ளார் என்று கூறியுள்ளார்.

4) ட்விட்டர் உரிமையாளராக எலான் மஸ்க் பதிவிட்ட முதல் ட்வீட்!

பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டரை வாங்குவதற்கு உலகின் முன்னணி கோடீஸ்வரரும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க் முன் வந்தார். இதனையடுத்து, ட்விட்டர் நிறுவனம் ட்விட்டரை எலான் மஸ்க்கிடம் 4,400 கோடி அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்யும் ஒப்பந்தம் இறுதியானது. ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளரான பின் எலான் மஸ்க் தனது முதல் ட்வீட்டாக “எனது மோசமான விமர்சகர்கள் கூட ட்விட்டரில் இருப்பார்கள் என்று நம்புகிறேன். ஏனெனில் அதுதான் பேச்சு சுதந்திரம்” என்று பதிவிட்டுள்ளார்.

5) சவப்பெட்டிகளை எரித்து போராட்டம் - இலங்கையில் நிலவும் பதற்றம்!

இலங்கையில் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து சவப்பெட்டிகளை எரித்து போராட்டம் நடைபெற்றதால், பதற்றம் ஏற்பட்டது. இலங்கையில் இப்போது மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை கூட விண்ணை மூட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. அதிபர், பிரதமர் மற்றும் பிரதமர் தலைமையிலான அமைச்சரவை பதவி விலகக்கோரி நடைபெற்று வரும் போராட்டம் தொடர்ந்து இரண்டு வாரத்தை கடந்து நீடித்து வருகிறது.

இந்நிலையில் இலங்கை அதிபருக்கும், அரசுக்கும் எதிர்ப்பு தெரிவித்து சவப்பெட்டிகளை எரித்து போராட்டம் நடைபெற்றதால், பதற்றம் ஏற்பட்டது. கொழும்புவில் சவப்பெட்டிகளை ஊர்வலமாக தூக்கிச்சென்று எதிர்ப்பை தெரிவித்த மக்கள், சவப்பெட்டிகளை தீயிட்டு எரித்தும் முழக்கங்களை தெரிவித்தனர்.

banner

Related Stories

Related Stories