உலகம்

செய்தி வாசிக்கும்போது நேரலையில் அழுத செய்தியாளர் - வைரலாக பரவும் வீடியோ!

உக்ரைன் போர் பற்றி செய்தி வாசித்தபோது செய்தி வாசிப்பாளர் தடுமாறி அழுத காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

செய்தி வாசிக்கும்போது நேரலையில் அழுத செய்தியாளர் - வைரலாக பரவும் வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முன்னாள் அதிபர் மவாய் கிபாகி காலமானார்!

கென்யாவின் முன்னாள் அதிபர் மவாய் கிபாகி தனது 90-வது வயதில் இன்று மரணமடைந்தார். இதுகுறித்து கென்யாவின் தற்போதைய அதிபர் உஹூரு கென்யாட்டா “கென்யாவின் முன்னாள் அதிபர் மவாய் கிபாகி இறந்தது நாட்டிற்கு ஒரு சோகமான நாள். அவர் கென்யாவின் சிறந்த முன்னோடி மற்றும் அரசியல்வாதி. அவர் ஒரு சிறந்த மனிதர். சிறந்த தேசபக்தர், சிறந்த விவாதக்காரர் மற்றும் நாட்டின் வளர்ச்சியை வழிநடத்தியவர். அவரது குடிமைப் பொறுப்பின் மரபு கென்யர்களின் தலைமுறைகளைத் தொடர்ந்து ஊக்குவிக்கும்.” என்று கூறினார்.

செய்தி வாசிக்கும்போது நேரலையில் அழுத செய்தியாளர் - வைரலாக பரவும் வீடியோ!

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு தனிமைப்படுத்துதல் இல்லை!

தாய்லாந்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களை இனி கட்டாயமாக தனிமைப்படுத்தப்படாது என்று அறிவித்துள்ளது. மே 1-ம் தேதி முதல் எந்தவிதமான சோதனையோ அல்லது தனிமைப்படுத்தலோ செய்ய வேண்டியதில்லை என்று தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓச்சா கூறுகையில், "சில நாடுகள் ஏற்கனவே தங்கள் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளன. நாம் சுற்றுலாத் துறையை நம்பியிருக்கும் நாடு. குறிப்பாக, இந்தக் காலங்களில் இது பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்ல உதவும்" என்றார்.

27 பேரை காணவில்லை - ரஷியா தகவல்

உக்ரைன் தாக்குதலில் மோஸ்க்வா கப்பல் தீப்பற்றி சேதமடைந்தது என ரஷியா ஒப்புக் கொண்டுள்ளது. இது தொடர்பாக ரஷியா பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மோஸ்க்வா போர்க்கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். மேலும் 27 பேரை காணவில்லை. 396 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது. இந்த கப்பல் பெருத்த சேதம் அடைந்திருப்பது ரஷியாவுக்கு பலத்த பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

செய்தி வாசிக்கும்போது நேரலையில் அழுத செய்தியாளர் - வைரலாக பரவும் வீடியோ!

மசூதியில் குண்டு வெடித்து 33 பேர் பலி!

ஆப்கானிஸ்தான் மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் 33 பேர் பலியாகியுள்ளனர். ஆப்கானிஸ்தானின் வடக்கு குண்டூஸ் மாகாணத்தின் இமாம் சாஹிப் மாவட்டத்தில் உள்ள மவுலவி செகந்தர் மசூதியில் நடந்த குண்டு வெடிப்பில் 33 பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியானது. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு எந்தக் குழுவும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நேரலையில் அழுத செய்தி வாசிப்பாளர்!

உக்ரைன் போர் பற்றி செய்தி வாசித்த போது செய்தி வாசிப்பாளர் தடுமாறி அழுத காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உக்ரைனில் உள்ள புச்சா பகுதியின் மீது தாக்குதல் நடத்திய வீரர்களை பாராட்டி ரஷிய அதிபர் புதின் கவுரவப்படுத்தினார். இதுதொடர்பான செய்தி ஜப்பானைச் சேர்ந்த ஒரு செய்தி நிறுவனத்தில் ஒளிபரப்பானது. அந்த செய்தியை வாசித்த செய்தி வாசிப்பாளர் யூமிகோ மட்சுவோ, நேரலையிலேயே தடுமாறி அழுதார். பின்னர் நிதானமடைந்த அவர், சிறிது நேரத்திற்கு பின் செய்தி வாசிப்பை தொடர்ந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது. பலர் அந்த செய்தி வாசிப்பாளரைப் போலவே தாங்களும் அழுததாக கருத்து பதிவிட்டுள்ளனர். மக்களின் மனதில் இந்த போர் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதற்கான சிறந்த உதாரணம் இது என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories