உலகம்

“Birthday கொண்டாடுனது ஒரு குத்தமாய்யா..?” - ஊழியருக்கு 3.4 கோடி இழப்பீடு வழங்கிய நிறுவனம் : காரணம் என்ன?

ஊழியரின் பிறந்தநாளை தேவையற்று கொண்டாடியதற்காக அவருக்கு ரூ.3.4 கோடிக்கு இழப்பீடு வழங்க நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“Birthday கொண்டாடுனது ஒரு குத்தமாய்யா..?” - ஊழியருக்கு 3.4 கோடி இழப்பீடு வழங்கிய நிறுவனம் : காரணம் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அமெரிக்காவைச் சேர்ந்தவர் கெவின் பெர்லி. இவர் கெண்டக்கி மாகாணத்தில் உள்ள கிராவிட் டயக்னாஸ்டிக்ஸ் நிறுவனத்தில் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றி வந்தார்.

இவர்கள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் பிறந்தநாள் அன்று Birthday Party கொண்டாடுவது வழக்கம். இதைப்பார்த்த கெவின், தனது நிறுவன அதிகாரியிடம் என்னுடைய பிறந்தநாளை இப்படி கொண்டாட வேண்டாம் என்றும், இந்த கொண்டாட்டங்கள் என்னை பீதியடையச் செய்கிறது என்றும் கூறியுள்ளார்.

ஆனால், கெவின் பிறந்தநாள் அன்று அவரது நிறுவனம் Birthday Party-யை ஏற்பாடு செய்துள்ளது. இதனால் அதிருப்தியடைந்த கெவின் உடனே அலுவலகத்தை விட்டு வெளியேறியுள்ளார்.

பின்னர் அடுத்தநாள் அலுவலகத்திற்கு வந்தபோது கெவினை சக ஊழியர்கள் விமர்சித்துள்ளனர். இதையடுத்து தன் செயலுக்கு நிறுவன அதிகாரியிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனால் சில நாட்களிலேயே அவரை பணிநீக்கம் செய்ததாக மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கெவின், நடுவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். இதனை விசாரணை செய்த நடுவர் மன்றம், ஊழியர் கெவினுக்கு ரூ.3.4 கோடிக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

பிறகு, நடுவர் மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதாகவும், கெவினுக்கு இழப்பீடு வழங்க முடியாது என கிராவிட் டயக்னாஸ்டிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories