உலகம்

“பாகிஸ்தான் புதிய பிரதமராக ஷாபாஸ் ஷெரீப் போட்டியின்றி தேர்வு” - யார் இந்த ஷாபாஸ் ஷெரீப்?

பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான்கான் நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பதவி இழந்ததை அடுத்து, புதிய பிரதமராக ஷாபாஸ் ஷெரீப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

“பாகிஸ்தான் புதிய பிரதமராக ஷாபாஸ் ஷெரீப் போட்டியின்றி தேர்வு” - யார் இந்த ஷாபாஸ் ஷெரீப்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் அரசு மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போது இம்ரான் கான் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் துணை சபாநாயகரால் ரத்து செய்யப்பட்டது. இந்த தீர்மானம் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது எனக்கூறி அவர் தீர்மானத்தை நிராகரித்தார்.

இதனையடுத்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அந்நாட்டு அதிபருக்கு "பாகிஸ்தான் பாராளுமன்றத்தைக் கலைக்க வேண்டும். ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும்" என்று கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், இம்ரான் கானின் பரிந்துரையை ஏற்று நாடாளுமன்றத்தை கலைத்து பாகிஸ்தான் அதிபர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இம்ரான் கான் அரசு கவிழ்ந்ததையடுத்து பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷாபாஸ் ஷெரீப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்காக பாராளுமன்றம் இன்று மீண்டும் கூடிய நிலையில், பாகிஸ்தானின் புதிய பிரதமராக ‌ஷபாஸ் ஷெரீப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி தலைவரான ‌ஷபாஸ் ஷெரீப்பை பிரதமராக தேர்ந்தெடுத்து எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் அவர் புதிய பிரதமராக தேர்வு செய்யப்படுள்ளார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் சகோதரர் ‌ஷபாஸ் ஷெரீப் ஆவார். அவர் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல்- மந்திரியாக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories