உலகம்

திருடுபோய் 22 ஆண்டுகளுக்குப் பின்னர் திரும்பக் கிடைத்த டார்வினின் நோட்டுகள்... இங்கிலாந்தில் ஆச்சர்யம்!

சார்லஸ் டார்வின் பரம்பரை பற்றிய ஓவியத்தை உள்ளடக்கிய இந்த நோட்டு புத்தகங்கள் பல மில்லியன் பவுண்ட் மதிப்புமிக்கவை.

திருடுபோய் 22 ஆண்டுகளுக்குப் பின்னர் திரும்பக் கிடைத்த டார்வினின் நோட்டுகள்... இங்கிலாந்தில் ஆச்சர்யம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

1) சிங்கப்பூர் ராணுவ அமைச்சருடன் நரவானே சந்திப்பு

இந்திய ராணுவ தளபதி எம்.எம்.நரவானே, 3 நாள் பயணமாக சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். நேற்று அவர் சிங்கப்பூர் ராணுவ மந்திரி நெங் ஹன்னை சந்தித்துப் பேசினார். பிராந்திய புவிஅரசியல் நிலவரம் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினார். அப்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான வலிமையான, நீண்டகால இருதரப்பு பாதுகாப்பு உறவை இருவரும் உறுதிப்படுத்தினர்.

2) 22 ஆண்டுகளுக்கு முன்னர் திருட்டுப்போன விஞ்ஞானி டார்வின் எழுதிய நோட்டுகள் திரும்பக் கிடைத்தன!

குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்ற பரிணாம கொள்கையால் இன்றளவும் புகழ்பெற்றிருப்பவர், விஞ்ஞானி சார்லஸ் டார்வின். இவர் கைப்பட எழுதிய 2 நோட்டு புத்தகங்கள், அவர் படித்த இங்கிலாந்து நாட்டில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்தன. ஆனால், 22 ஆண்டுகளுக்கு முன்பாக அந்த புத்தகம் அங்கிருந்து திருட்டுப்போய் விட்டது. இதுபற்றி 15 மாதங்களுக்கு முன்பு BBC சிறப்பு செய்தி வெளியிட்டது. இந்நிலையில், யாரோ கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழத்தில் அந்த புத்தகத்தை விட்டு விட்டுச் சென்றுள்ளனர். சார்லஸ் டார்வின் பரம்பரை பற்றிய ஓவியத்தை உள்ளடக்கிய இந்த நோட்டு புத்தகங்கள் பல மில்லியன் பவுண்ட் மதிப்பு மிக்கவை ஆகும்.

3) உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஏவுகணைகளை வழங்க அமெரிக்கா ஒப்புதல்!

ரஷ்ய படையை எதிர்த்துப் போராட ஏவுகணைகளை வழங்கும்படி உக்ரைனிய ராணுவத்தினர் உதவிக் கோரினர். உக்ரைனுக்கு உதவும் வகையில், அமெரிக்கா முழு ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்திருந்தது. அதன்படி, உக்ரைன் அரசாங்கத்திற்கு 500 மில்லியன் டாலர்களை நேரடி பட்ஜெட் உதவியாக வழங்கப்படும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்ததாக வெள்ளை மாளிகை ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், 100 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளதாக நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

திருடுபோய் 22 ஆண்டுகளுக்குப் பின்னர் திரும்பக் கிடைத்த டார்வினின் நோட்டுகள்... இங்கிலாந்தில் ஆச்சர்யம்!

4) சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

சீனாவின் சிச்சுவான் மாகாணம் யிபின் நகரில் உள்ள ஜிவ்வென் கவுண்டியில் இன்று காலை 7.50 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் ரிக்டர் அளவு 5.1 ஆக பதிவாகி இருப்பதாக சீன பூகம்ப மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 28.22 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 105.03 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் சுமார் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையப்பகுதியைச் சுற்றி 5 கிலோமீட்டருக்குள் பல கிராமங்கள் உள்ளன. இருப்பினும், நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உயிரிழப்புகள் குறித்து இதுவரை புகார் எதுவும் வரவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

5) போராடும் மக்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது- இலங்கைக்கு ஐ.நா. சபை அறிவுரை

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராடி வருகிறார்கள். இது தொடர்பாக ஐ.நா. சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இலங்கை நிலவரத்தை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். விலைவாசி உயர்வை எதிர்த்து போராட்டம் நடத்தும் மக்கள் மீது தாக்குதல் நடத்துவது சரியான செயல் அல்ல. சிங்கள படைகள் அப்படி அத்துமீறி நடந்துகொள்ளக் கூடாது. எதிர்க்கட்சிகள் மக்களிடம் போராட்டத்தை தூண்டிவிடக்கூடாது. அமைதியை ஏற்படுத்த அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும்’ என்று கூறி உள்ளது.

banner

Related Stories

Related Stories