உலகம்

அமெரிக்காவின் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை ரத்து.. காரணம் என்ன? #5in1_World

அதிகப்படியான எச்சரிக்கையின் காரணமாகவும் ஏவுகணை சோதனை ஒத்திவைக்கப்பட்டது.

அமெரிக்காவின் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை ரத்து.. காரணம் என்ன? #5in1_World
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

1) பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!

அமெரிக்க டாலருக்கு எதிரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது. ஒரு டாலருக்கு இணையான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு 183 ஆக சரிந்திருக்கிறது. சீனாவிடம் இருந்து பெற்ற கடன்களில் ஒரு பகுதி உள்ளிட்ட கடன்களை திரும்பச் செலுத்தியதால் அந்நியச் செலாவணி இருப்பு குறைந்து, ரூபாய் மதிப்பு சரிந்துள்ளதாக பாகிஸ்தான் ஸ்டேட் வங்கி தெரிவித்திருக்கிறது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ள சூழலில், அங்கு அரசியலில் நெருக்கடி நிலை நிலவுவது குறிப்பிடத்தக்கது.

2) அமீரகத்தில் அரசு, தனியார் நிறுவனங்களில் வேலை நேரம் குறைப்பு!

இஸ்லாமிய புனித மாதமான ரமலான் அமீரகத்தில் சனிக்கிழமை தொடங்கியது. இதையொட்டி அரசு, தனியார் நிறுவனங்களில் வேலை நேரம் குறைக்கப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகள் இஸ்லாமிய விவகாரங்களில் சவுதி அரேபியாவின் முடிவுகளைப் பின்பற்றி வருகிறது. இதில் நேற்று சவுதி அரேபியாவில் பிறை தென்பட்டதால் ரமலான் மாதம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஓமன் நாட்டில் நேற்று மாலை பிறை பார்க்கப்பட்டது. அப்போது பிறை தென்படவில்லை. எனவே ஓமன் நாட்டில் ஞாயிற்றுக்கிழமை ரமலான் மாதம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

3) விக்கிபீடியாவுக்கு ரஷ்யா மிரட்டல்!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு குறித்து ரஷ்ய மொழியிலான விக்கிபீடியா பக்கத்தில் தவறான தகவல்களை பதிவிட்டால் 4 மில்லியன் ரூபில் அபராதம் விதிக்கப்படும் என ரஷ்யாவின் தகவல் தொடர்பு கட்டுப்பாட்டாளர் மிரட்டல் விடுத்துள்ளார். முன்னதாக கூகுள் நிறுவனத்துக்கும் அபராதம் விதிக்கப்படும் என ரஷ்யா மிரட்டல் விடுத்திருந்தது. அங்கு பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் ஆகிய சமூக வலைதளங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை ரத்து.. காரணம் என்ன? #5in1_World

4) 100 வயதில் ஓய்வுபெற்ற ரேஞ்ஜர்!

கலிபோர்னியாவில் உள்ள தேசிய பூங்கா சேவை நிறுவனம் தங்கள் நிறுவனதின் பழம்பெறும் ரேஞ்ஜர் தனது 100-வது வயதில் ஓய்வு பெற்றதாக அறிவித்துள்ளது. பெட்டி ரீட் சோஸ்கின் என்பவர் தனது 84 வயதில் இந்த நிறுவனத்தில் தற்காலிகப் பதவியைப் பெற்றார். 2011-ல் நிரந்தரப் பணியாளரானார். இதனால் அவர் அமெரிக்காவின் மிகப் பழமையான டேசிய பூங்கா ரேஞ்ஜர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார். பூங்காவில் சோஸ்கினுக்கான ஓய்வு வ்ருந்து நடைபெறும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

5) அமெரிக்காவின் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை ரத்து!

LGM-30G மினிட்மேன் 3 ஏவுகணையின் வழக்கமான சோதனைப் பயணத்தை மார்ச் 2022-ம் ஆண்டில் நடத்த அமெரிக்கா திட்டமிட்டிருந்தது. ஆனால், ரஷியா - உக்ரைன் இடையேயான படையெடுப்பின்போது தவறான தகவல் தொடர்புகளைத் தவிர்ப்பதற்காகவும், அதிகப்படியான எச்சரிக்கையின் காரணமாகவும் ஏவுகணை சோதனை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், அதே காரணத்திற்காக தற்போது ஏவுகணை சோதனை ரத்து செய்யப்பட்டுள்ளதகவும், அடுத்த திட்டமிடப்பட்ட சோதனை இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஏவப்படும் என்று நம்பிக்கையுள்ளது எனவும் அமெரிக்க விமானப்படையின் செய்தித் தொடர்பாளர் ஆன் ஸ்டெபனெக் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories