உலகம்

#5in1_World : இஸ்ரேல் பிரதமருக்கு கொரோனா தொற்று... இந்திய சுற்றுப்பயணம் கேள்விக்குறி!

இஸ்ரேல் பிரதமர் நஃப்டாலி பென்னட்டுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

#5in1_World : இஸ்ரேல் பிரதமருக்கு கொரோனா தொற்று... இந்திய சுற்றுப்பயணம் கேள்விக்குறி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

1) அமெரிக்க திரைப்படம் "டியூன்" 6 ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்றது!

சர்வதேச அளவில் திரைப்பட உலகின் மிக உயரிய விருதாக ஆஸ்கர் விருதுகள் கருதப்படுகின்றன. நடப்பாண்டிற்கான 94வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இந்திய நேரப்படி இன்று காலை தொடங்கியது. ஆஸ்கர் விருது விழாவை மூன்று பெண்கள் தொகுத்து வழங்குவது இதுவே முதன்முறை.

டெனிஸ் வில்லெனு இயக்கிய அமெரிக்க திரைப்படமான "டியூன்" திரைப்படம், சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒலி ஆகிய 6 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்றுள்ளது.

2) சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றார் வில் ஸ்மித்!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வில் ஸ்மித்திற்கு முதன்முறையாக கிடைத்துள்ளது. 'கிங் ரிச்சர்ட்' திரைப்படத்தில் நடித்ததற்காக இந்த விருதை அவர் வென்றுள்ளார். சிறந்த நடிகைக்கான விருது ஜெசிகா சாஸ்டைனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

The Eyes of Tammy Faye திரைப்படத்தில் நடித்ததற்காக இந்த விருது கிடைத்துள்ளது. 'தி பவர் ஆஃப் தி டாக்' திரைப்படத்தை இயக்கியதற்காக ஜேன் கேம்பியன் சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கார் விருதை வென்றார். கோடா சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றுள்ளது.

3) ஆஸ்கர் விழாவில் தொகுப்பாளரின் கன்னத்தை "பழுக்க வைத்த" நடிகர்!

2022-ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்தது. நிகழ்ச்சியை அமெரிக்காவின் பிரபல ஸ்டான்ட்-அப் காமெடியனான கிறிஸ் ராக் தொகுத்து வழங்கினார். அப்போது நடிகர் வில் ஸ்மித்தின் மனைவி ஜடா ஸ்மித்தின் மொட்டை தலை குறித்து நகைச்சுவைக்காக கிண்டலாக கிறிஸ் ராக் பேசினார். கோபமான வில் ஸ்மித் மேடையேறி சென்று கிறிஸ் ராக்கை ஓங்கி பளார் என அறைந்தார். இது காண்போரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

4) ராஜபக்சேவுடன் இந்திய வெளியறவுத்துறை மந்திரி சந்திப்பு

மாலத்தீவு சென்றிருந்த இந்திய வெளியறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தமது பயணத்தை முடித்துக்கொண்டு இலங்கை சென்றார். கொழும்புவில் நாளை நடைபெறும் பிம்ஸ்டெக் கூட்டமைப்பின் மந்திரிகள் பங்கேற்கும் மாநாடில் ஜெய்சங்கர் கலந்து கொள்கிறார்.

இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இந்தியாவின் ஆதரவு குறித்து இருவரும் விவாதித்ததாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள இந்தியாவிடம் நிதி உதவி கேட்டு கடந்த வாரம் இலங்கை நிதி மந்திரி பசில் ராஜபக்சே டெல்லி வந்திருந்த நிலையில், கொழும்புவில் ஜெய்சங்கர் அவரை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

5) இஸ்ரேல் பிரதமருக்கு கொரோனா!

இஸ்ரேல் பிரதமர் நஃப்டாலி பென்னட்டுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்தியா-இஸ்ரேல் இடையேயான 30 ஆண்டுகால ராஜீய ரீதியிலான உறவைக் கொண்டாடும் வகையில் ஏப்ரல் 2-ஆம் தேதி அவர் இந்தியாவுக்கு வரவிருந்தார்.

இந்நிலையில் அவர் இந்திய சுற்றுப்பயணம் மேற்கொள்வாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் இஸ்ரேல் பிரதமராக பதவியேற்ற பென்னட் அரசமுறை பயணமாக முதன்முறையாக இந்தியா வரவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories