உலகம்

WORLD NEWS TODAY : டிஸ்னி பொழுதுபோக்கு பூங்கா மூடல்.. இந்திய வம்சாவளி மாணவி கொலை - நடந்தது என்ன?

லண்டன் பல்கலையில் படித்த இந்திய வம்சாவளி மாணவி கொலை செய்யப்பட்டார்.

WORLD NEWS TODAY : டிஸ்னி பொழுதுபோக்கு பூங்கா மூடல்.. இந்திய வம்சாவளி மாணவி கொலை - நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

1) டிஸ்னி பொழுதுபோக்கு பூங்கா மூடல் :

அமெரிக்காவை சேர்ந்த டிஸ்னி நிறுவனத்தின் பொழுதுபோக்கு பூங்காக்கள் உலகம் முழுவதும் பிரபலமானவை. சீனாவில் அதிக மக்கள் தொகையை கொண்ட பெரிய நகரமான ஷாங்காய் நகரில் பிரமாண்டமான டிஸ்னி பொழுதுபோக்கு பூங்கா உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு ஷாங்காய் நகரில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவை காலவரையின்றி மூடுவதாக டிஸ்னி நிறுவனம் அறிவித்துள்ளது.

2) OIC குழுவின் தலைவராக பாகிஸ்தான் பொறுப்பேற்பு :

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் குழுவின் 48-வது கூட்டத் தொடரின் தலைவராக பாகிஸ்தான் பொறுப்பேற்றுள்ளது. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹமூத் குரேஷி அவரது தொடக்க உரையில் இந்த மன்றம் முஸ்லிம் நாடுகளுக்கும் மற்ற நாடுகளுக்கும் இடையே ஒரு பாலமாக உள்ளது என்றும், முஸ்லிம் உலகில் உள்ள மோதல்களை தீர்ப்பதில் அதன் பங்கை எடுத்துக்காட்டுகிறது என்றும் அவர் கூறினார்.

3) இஸ்ரேல் தூதரகத்தை திறக்கிறது சிங்கப்பூர் :

சிங்கப்பூர் முதன்முறையாக இஸ்ரேல் தூதரகம் திறக்கிறது. சிங்கப்பூர் ஏற்கனவே இஸ்ரேலின் ஆயுத சந்தைகளின் முக்கியமன நகரமாக இருந்து வருகிறது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்களுடனான உறவுகளை விரிவுபடுத்த விரும்புவதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். 1965-ல் தூதரக உறவுகள் நிறுவப்பட்ட பின்னர் முதல் முறையாக சிங்கப்பூர் இஸ்ரேலில் தூதரகத்தை திறக்கவுள்ளது.

4) இந்திய வம்சாவளி மாணவி கொலை :

லண்டன் பல்கலையில் படித்த இந்திய வம்சாவளி மாணவி கொலை செய்யப்பட்டார். பிரிட்டனைச் சேர்ந்த இந்திய வம்சாவளியான 19 வயதான சபிதா தன்வானி, லண்டன் பல்கலையில் படித்து வந்தார்.

அங்குள்ள ஆர்பர் ஹவுஸ் மாணவியர் விடுதியில் தங்கியிருந்தார். கடந்த 19ம் தேதி, அவர் அறையில் இறந்து கிடந்தார். விசாரணை நடத்திய 'ஸ்காட்லாண்ட் யார்டு' போலிஸார், துனிசியாவை சேர்ந்த மஹெர் மாரூப் என்ற இளைஞரை கைது செய்துள்ளனர்.

5) கியூபாவில் எரிபொருள் தட்டுப்பாடு :

கியூபாவில் பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. கியூபாவில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்கனவே உணவு மற்றும் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது அங்கு எரிபொருள் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. கியூபாவின் தலைநகர் ஹவானாவில் பொதுமக்களுக்கு குறைந்த அளவில் எரிபொருள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் அங்குள்ள மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories