
கனடாவில், இந்திய நேரப்படி இன்று அதிகாலை ஏற்பட்ட சாலை விபத்து ஒன்றில் இந்தியாவைச் சேர்ந்த ஹர்ப்ரீத் சிங், ஜஸ்பிந்தர் சிங், கரன்பால் சிங், மோகித் சவுகான் மற்றும் பவன் குமார் ஆகிய 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 2 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தைக் கனடா நாட்டிற்கான இந்தியத் தூதர் அஜய் பிஸாரியா உறுதிப்படுத்தியுள்ளார்.
அதேபோல் சாலை விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கள் தெரிவித்து, மாணவர்களின் குடும்பத்திற்குத் தேவையான உதவி செய்யப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
சாலையில் மாணவர்கள் சென்ற வேன், முன்னே சென்ற ட்ராக்டரில் மோதியதால் இந்த விபத்து நடந்துள்ளது என்றும் போலிஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் உயிரிழந்த மாணவர்களின் உடலை இந்தியாவிற்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகிறது.








