உலகம்

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை.. அமெரிக்காவை நடுங்க வைக்கும் வட கொரியா : ‘கிம்’-க்கு கடும் எதிர்ப்பு!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வட கொரியா நடந்தி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை.. அமெரிக்காவை நடுங்க வைக்கும் வட கொரியா : ‘கிம்’-க்கு கடும் எதிர்ப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

அமெரிக்காவின் நேட்டோ படைகளால் உக்ரைன் - ரஷ்யா நாடுகளுக்கு இடையே போர் மூண்டு உலக நாடுகளிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், வட கொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மோதல் மீண்டும் தொடங்கியுள்ளது. நாங்கள் அணுசக்தி திறன்களை ஓரளவு நிறுத்தி வைப்பதற்கு பதிலாக, எங்கள் மீதான பொருளாதார தடைகளை படிப்படியாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்காவிடம் வடகொரியா கடந்த பேச்சுவார்த்தையின்போது கூறியது. ஆனால் அதை அமெரிக்கா ஏற்கவில்லை.

இந்நிலையில், புத்தாண்டு பிறந்தது முதல் வடகொரியா கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. ஒலியை விட 5 மடங்கு வேகமாக செல்கிற ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை நடத்தியதை தொடர்ந்து வட கொரிய அதிகாரிகள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது.

அதுமட்டுல்லாது, வட கொரியா 2 பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளை ஏவி, கடலில் செலுத்தியதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்தது. அதாவது, வடகொரியா குறுகிய தொலைவு ஏவுகணைகள் இரண்டை 5 நிமிட இடைவெளியில் கடற்கரை நகரமான ஹாம்ஹங்கில் இருந்து ஏவியதாகவும், அவை 190 கி.மீ. தொலைவுக்கு பறந்ததாகவும் பின்னர் அவைகடலில் விழுந்ததாகவும் கொரியாவின் கூட்டுப்படை தலைவர்கள் தெரிவித்திருந்தனர்.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை.. அமெரிக்காவை நடுங்க வைக்கும் வட கொரியா : ‘கிம்’-க்கு கடும் எதிர்ப்பு!

இந்நிலையில், வட கொரியா நடந்தி இருக்கும் சோதனை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை போல் இருப்பதாகவும் அவை தெரிவித்துள்ளன. இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகமான பெண்டகன் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி வெளியிட்டுள்ள தகவலில், வட கொரியா 5,500 கிலோ மீட்டர் தூரம் பாயும் ஏவுகணை சோதனை நடத்தினால் அவை அமெரிக்காவை தாக்கும். அவை அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் திறன் கொண்டவை.

ஆனால் வட கொரியா இதனை விண்வெளி ஏவுகணை தளம் போல் காட்டுகிறது. இதன்மூலம் வட கொரியா ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி இருக்கிறது. வட கொரியாவின் ஏவுகணை சோதனை பதற்றத்தை ஏற்படுத்துவதாக உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 2 மாதத்தில் வடகொரியா நடத்திய 7-வது ஏவுகணை சோதனை இதுவாகும். இதனால் வட கொரியாவுக்கு தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட அண்டை நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. தன் மீதான அணு ஆயுதமற்ற நடவடிக்கைகளுக்கு எதிராக முடக்கப்பட்ட அமெரிக்கா தலைமையிலான பொருளாதார தடைகளை விடுவிப்பதை நோக்கமாக கொண்டு, நிறுத்தப்பட்ட நீண்டகால பேச்சுவார்த்தைகள் மீது ஜோ பைடன் நிர்வாகத்துக்கு அழுத்தம் தருவதுதான் வட கொரியாவின் நோக்கம் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள்.

banner

Related Stories

Related Stories