உலகம்

”மறக்கவோ மன்னிக்கவோ மாட்டோம்.. கல்லறையைத் தவிர அமைதியான இடம் இருக்காது” : உக்ரைன் அதிபர் கொதிப்பு!

உக்ரைன் மீது தாக்குதல் தொடுத்தவர்களை மன்னிக்க மாட்டோம் என அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

”மறக்கவோ மன்னிக்கவோ மாட்டோம்.. கல்லறையைத் தவிர அமைதியான இடம் இருக்காது” : உக்ரைன் அதிபர் கொதிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் 12வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போர் காரணமாக இதுவரை 15 லட்சம் உக்ரைன் நாட்டு மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக குடிபெயர்ந்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

மேலும் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள காரணத்தால், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் ரஷ்யாவிற்குப் பொருளாதார தடை விதித்துள்ளன. அதேபோல், Tik Tok, Netflix சேவைகளை நிறுத்துவதாக அந்த நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இதுவரை போரை நிறுத்துவதற்காக இரண்டு முறை நடைபெற்ற பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிவடைந்துள்ளது. இதனால் மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தைக்கு இரண்டு நாடுகளும் முன்வந்துள்ளன.

ஏற்கனவே இரண்டு நகரங்களில் தற்காலிகமாகப் போரை ரஷ்யா நிறுத்துவதாக அறிவித்த நிலையில், மேலும் கீவ், கார்கிவ், சுமி, மரியுபோல் ஆகிய நான்கு நகரத்திலும் போரை நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. பொதுமக்கள் நாட்டைவிட்டு பத்திரமாக வெளியேறவே இந்த போரைத் தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உக்ரைன் மீது தாக்குதல் தொடுத்தவர்களை நாங்கள் மன்னிக்க மாட்டோம் என அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "நாங்கள் மன்னிக்க மாட்டோம், மறக்க மாட்டோம், எங்கள் நிலத்தில் அட்டூழியங்களைச் செய்த அனைவரையும் தண்டிப்போம். இந்த பூமியில் கல்லறையைத் தவிர அமைதியான இடம் இருக்காது" எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories