உலகம்

உக்ரைன் மீதான போர் தற்காலிகமாக நிறுத்தம் - ரஷ்யா அறிவிப்பு : புதின் முடிவுக்கு இதுதான் காரணமா?

இன்று காலை 6 மணி முதல் உக்ரைன் மீதான போர் தாக்குதலை ரஷ்யா தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீதான போர் தற்காலிகமாக நிறுத்தம் - ரஷ்யா அறிவிப்பு : புதின் முடிவுக்கு இதுதான் காரணமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகின்றன. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளன.

அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக்கொள்ள, ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. இந்நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றனர்.

10 நாட்களாக நடைபெற்று வரும் இந்தப் போரால் இரு நாட்டைச் சேர்ந்த ஏராளாமானவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பொதுமக்களிலும் 20க்கும் மேற்பட்டோர் பலியானதாகக் கூறப்படுகிறது. அதில் இந்தியாவைச் சேர்ந்த மாணவர் ஒருவரும் உயிரிழந்தார். அதேவேளையில், மற்றொரு மாணவரும் போர் நடக்கும் பகுதியில் இருந்து வெளியேறும்போது குண்டடிப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அதேபோல், உலகில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் உக்ரைனில் சிக்கி தங்களின் தாயகம் திரும்ப முடியாமல் அவதியுறும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் முன்னறிவிப்பு எதுமின்றி, போர் உடனடியாக தொடங்கப்பட்டதால், எங்களால் சொந்த நாட்டுக்கு செல்ல முடியாமல் இருப்பதாக மாணவர் தரப்பில் கூறப்பட்டது.

இதற்கிடையில் இருநாடுகளிடையே நடந்த இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்துள்ளது. இந்நிலையில், மீட்பு பணிகளுக்காக உக்ரைனில் தற்காலிகமாக போர் நிறுத்தம் செய்யப்படுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று காலை 6 மணி முதல் உக்ரைன் மீதான போர் தாக்குதலை ரஷ்யா தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

அதாவது உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் உள்பட வெளிநாட்டினர் பாதுகாப்பாக நாட்டை விட்டு வெளியேறும் பொருட்டு மனிதாபிமான அடிப்படையில் உக்ரைன் மீதான போர் தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories