உலகம்

போருக்கு போகும் வழியில் பெட்ரோல் இல்லாமல் நின்றுபோன ரஷ்ய பீரங்கி.. உதவி வேண்டுமா என கேட்ட உக்ரைனியர்கள்!

எரிபொருள் இல்லாமல் நடுவழியில் நின்ற ரஷ்ய ராணுவ வாகனத்திற்கு உதவி வேண்டுமா என உக்ரேனியர்கள் கேட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

போருக்கு போகும் வழியில் பெட்ரோல் இல்லாமல் நின்றுபோன ரஷ்ய பீரங்கி.. உதவி வேண்டுமா என கேட்ட உக்ரைனியர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலக நாடுகளின் எதிர்ப்பைப் புறந்தள்ளி உக்ரைன் மீது ரஷ்யா மூன்றாவது நாளாகத் தாக்குதல் தொடுத்து வருகிறது. மேலும் உக்ரைன் தலைநகரான கீவ் நகரை ரஷ்ய ராணுவ வீரர்கள் சுற்றி வளைத்துள்ளனர். இதனால் உக்ரைன் மக்கள் தங்களின் சொந்த நாட்டை விட்டு, கண்ணீருடன் வெளியேறி வருகின்றனர்.

மேலும் நாட்டைவிட்டு வெளியேற முடியாமல் இருக்கும் மக்கள் மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் சுரங்கங்களில் தஞ்சமடைந்துள்ளனர். ரஷ்ய படைகள் முன்னேறிக்கொண்டே வருவதால் உக்ரைன் மக்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை பொருட்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட 198 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 33 குழந்தைகள் உட்பட 1,115 பேர் படுகாயமடைந்துள்ளதாக உக்ரைன் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் உக்ரைன் பகுதியில் நுழைந்த ரஷ்ய ராணுவ டாங்கி ஒன்று எரிபொருள் இல்லாமல் நடுவழியில் நின்றுள்ளது. இதையடுத்து ராணுவ வீரர்கள் வாகனத்தின் வெளியே நின்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வாகனத்தில் வந்த உக்ரேனியர் ஒருவர் உங்களை ரஷ்யா வரை கொண்டு வந்து விடவா என கேட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை நாட்டை விட்டு வெளியேறும்படி அமெரிக்கா ஆலோசனை வழங்கியுள்ளது. இதை ஜெலன்ஸ்கி மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் 3 நாட்களாக போர் நடந்து வந்தாலும் இன்னும் கீவ் நகரத்தை ரஷ்யா கைப்பற்றவில்லை என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories