உலகம்

நடுக்கடலில் திடீரென தீ விபத்து.. போர்ஷே, ஆடி என 3,695 சொகுசு கார்களுடன் கடலில் மூழ்கும் சரக்குக் கப்பல்!

3 நாட்கள் ஆன நிலையில், ‘ஃபெலிசிட்டி ஏஸ்’ கப்பலில் இருந்த பணியாளர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் கப்பல் மீட்கப்பட்டாமல் நடுக்கடலில் ஏரிந்துக்கொண்டிருக்கிறது.

நடுக்கடலில் திடீரென தீ விபத்து.. போர்ஷே, ஆடி என 3,695 சொகுசு கார்களுடன் கடலில் மூழ்கும் சரக்குக் கப்பல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஜெர்மனியின் எம்டன் பகுதிலிருந்து அட்லாண்டிக் கடல் வழியாக, ‘ஃபெலிசிட்டி ஏஸ்’ எனப்படும் 656 அடி நீளமுள்ள சரக்குக் கப்பல் ஒன்று 22 பயணியாளர்களுடன் ரோல் ஆஃப் - ரோல் ஆன் எனப்படும் சொகு கார்களை ஏற்றிக்கொண்டு ரோட் தீவின் டேவிஸ்வில்லிக்கு சென்றுக்கொண்டிருந்தது.

அப்போது கடலில் சென்ற ‘ஃபெலிசிட்டி ஏஸ்’ சரக்குக் கப்பல் எதிர்பாராதவிதமாக தீப்பிடித்தது. தீ பிடித்தப் பகுதியில், கப்பலில் போர்ஷஸ் மற்றும் வோக்ஸ்வேகன் உள்ளிட்ட கார்களும் இருந்துள்ளது. 3 நாட்கள் ஆன நிலையில் கப்பலில் இருந்த பணியாளர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் கப்பல் மீட்கப்பட்டாமல் நடுக்கடலில் ஏரிந்துக்கொண்டிருக்கிறது.

இதனிடையே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள போர்ச்சுகீசிய கடற்படை, “கப்பல் சரியாக போர்ச்சுக்கலின் அசோர்ஸிலிருந்து சுமார் 90 மைல் தூரத்தில் இருந்து தீப்பிடிக்கத் தொடங்கியுள்ளது. எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இந்த விபத்தால் கப்பலை கடலிலேயே விட்டுச்செல்லும்படியான சூழல் எற்பட்டுள்ளது.

பின்னர் போர்ச்சுகீஸின் கடற்படை,ம் போண்டா டெல்கா எனப்படும் கடல்சார் தேடல் மட்டும் மீட்பு படையின் உதவியுடன் கப்பலில் இருந்து 22 பேர் மீட்கப்பட்டனர்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கப்பலில், 1,100 போர்ஷே, 189 பென்ட்லி, ஆடி கார்கள் என மொத்தம் 3695 இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதேவேளையில் சுற்றுச்சுழலுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories