உலகம்

நீச்சல் வீரரை கடித்து கடலுக்குள் இழுத்துச் சென்ற சுறா.. சிட்னி கடற்கரையில் நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்!

சிட்னி கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்தவரை சுறா இழுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீச்சல் வீரரை கடித்து கடலுக்குள் இழுத்துச் சென்ற சுறா.. சிட்னி கடற்கரையில் நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சிட்னி நகரத்தில் உள்ள கடற்கரை ஒன்றில் கடந்த புதன் கிழமையன்று சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியாக தங்களின் பொழுதுகளை கழித்தும், கடலில் பலர் உற்சாகமாகக் குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது சுறா மீன் ஒன்று திடீரென கடலில் குளித்துக் கொண்டிருந்த ஒருவரைக் கடித்து இழுத்துச் சென்றது. இதைப்பார்த்து கடலில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தது கடற்கரையை நோக்கி பதறியடித்து ஓடினர்.

இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் அவரை தேடிப்பார்த்தனர். அப்போது துண்டு துண்டாக சில உடல் பாகங்களும், கிழிந்த நிலையில் ஆடைகள் மட்டுமே மீட்புக்குழுவினருக்குக் கிடைத்துள்ளன.

இதையடுத்து கடற்கரையிலிருந்த பொதுமக்களை போலிஸார் அங்கிருந்து வெளியேற்றினர். பின்னர் கடற்கரைக்கு மக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் இப்படி ஒரு மோசமான சம்பவம் நடைபெறுவது இதுவே முதல்முறையாகும்.

மேலும் போலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் சுறா இழுத்துச் சென்ற நபர் நீச்சல் வீரர் என்பது தெரியவந்துள்ளது. ஆனால் யார் அவர் என்பதை போலிஸார் கூறவில்லை.

banner

Related Stories

Related Stories