உலகம்

கறுப்பினத்தவர் மீது இனப்பாகுபாடு.. TESLA மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு: பின்னணி என்ன?

டெஸ்லா தொழிற்சாலையில் கறுப்பினத்தவர்கள் மீது இனப்பாகுபாடு காட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

கறுப்பினத்தவர் மீது இனப்பாகுபாடு.. TESLA மீது  அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு: பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மின்சார வாகன புரட்சியின் முன்னணியில் இருப்பது எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம். உலகம் முழுவதும் தனது நிறுவனத்தைத் தொடங்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் மஸ்.

இந்தியாவில் கூட தனது கிளையை தொடங்குவதற்காக ஒன்றிய அரசிடம் அனுமதி கேட்டுள்ளார். இந்நிலையில் இந்நிறுவனம் இனபாகுபாடு சர்ச்சையில் சிக்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்திற்குட்பட்ட பிரான்சிஸ்கோ நகரத்தில் டெஸ்லா தொழிற்சாலை உள்ளது. அங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் இங்கு பணியாற்றி வரும் கறுப்பின தொழிலாளர்களுக்கு வேலைகள் ஒதுக்கீடு, ஊதியம் மற்றும் பதவி உயர்வு ஆகியவற்றில் இனப்பாகுபாடு காட்டப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையடுத்து வேலை வாய்ப்பு மற்றும் வீட்டு வசதித்துறை டெஸ்லா நிறுவனத்தின் மீது அலமேடா நீதிமன்றத்தில் இனப்பாகுபாடு வழக்குத் தொடுத்துள்ளது. டெஸ்லா நிறுவனத்தின் மீதான இந்த புகார் உலகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இனப்பாகுபாடு புகார் உண்மைக்குப் புறம்பானது என டெஸ்லா நிறுவனம் தனது இணையதளத்தில் விளக்கமளித்துள்ளது.

banner

Related Stories

Related Stories