உலகம்

முன்னாள் காதலனிடம் பணம் பறிக்க ‘பலே’ பிளான் போட்ட காதலி.. லண்டனில் அதிர்ச்சி!

காதலி ஒருவர் பணத்திற்காக தன்னைத்தானே கடத்தியதாக காதலனிடம் நாடகமாடிய சம்பவம் லண்டனில் நடந்துள்ளது.

முன்னாள் காதலனிடம் பணம் பறிக்க ‘பலே’ பிளான் போட்ட காதலி.. லண்டனில் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

லண்டனைச் சேர்ந்தவர் லியா ஜுமேக்ஸ். இளம்பெண்ணான இவர் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். பின்னர் இவர்கள் பிரிந்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் காதலன் செல்போனுக்கு படம் ஒன்று வந்துள்ளது.

இதில், காதலி ஜுமேக்ஸை மர்ம நபர்கள் கடத்தி துப்பாக்கி முனையில் கட்டிப்போட்டது போன்று இருந்தது. மேலும் ரூ. 2 லட்சம் கொடுத்தால் உங்கள் காதலியை விட்டுவிடுவதாகவும் குறுஞ்செய்தி வந்துள்ளது.

இதுகுறித்து அவர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து லியா ஜுமேக்ஸ் வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது அவர் காதலனிடம் பணத்தைப் பறிப்பதற்காகக் கடத்தல் நாடகமாடியதாக ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அவருக்கு 8 மாதங்கள் சிறைத் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டனர். பின்னர் போலிஸார் அவரை சிறையில் அடைத்தனர்.

banner

Related Stories

Related Stories