உலகம்

“தன்பாலின ஈர்ப்பாளர்களை பெற்றோர்கள் ஆதரிக்க வேண்டும்” : போப் பிரான்சிஸ் முக்கிய வேண்டுகோள்!

தன்பாலின ஈர்ப்பாளராக மாறும் பிள்ளைகளை அவர்களது பெற்றோர்கள் ஏற்றுக் கொள்ளவேண்டும் என போப் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார்.

“தன்பாலின ஈர்ப்பாளர்களை பெற்றோர்கள் ஆதரிக்க வேண்டும்” : போப் பிரான்சிஸ் முக்கிய வேண்டுகோள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

வாட்டிகனில் நடைபெற்ற கூட்டத்தில், தன்பாலின ஈர்ப்பாளராக மாறும் பிள்ளைகளை அவர்களது பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என போப் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார். வாட்டிகன் நகரில் நடைபெற்ற வாராந்திர கூட்டத்தில், தன்பாலின ஈர்பாளர்களாக மாறும் பிள்ளைகளை வளர்ப்பதில் பெற்றோர் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து போப் பிரான்சிஸ் பேசினார்.

அப்போது பேசிய அவர், “தங்களுடைய குழந்தைகள் தன்பாலின ஈர்பாளர்களாக இருப்பதற்கான மாறுதல்களை கொண்டிருக்கும்போது, அதனை எவ்வாறு அனுகவேண்டும் என்பதைதான் சிந்திக்க வேண்டுமே தவிர, அவர்களை தண்டிக்கவோ, கண்டிக்கும் முயற்சியிலோ ஈடுபடக்கூடாது. அவ்வாறு ஈடுபடுவது தவறான ஒன்றாக மாறிவிடும்.

அதுமட்டுமல்லாது, ஒரே பாலின திருமணங்களை தேவாலயங்கள் ஏற்க முடியாததுதான். ஆனாலும், அந்த தம்பதிகளுக்கான சுகாதாரம், ஓய்வுதியம் மற்றும் அடிப்படை உரிமை மாதிரியான சிவில் யூனியன் சட்டங்களை நம்மால் ஆதரிக்கமுடியும்.

மேலும் தன்பாலின ஈர்ப்பாளராக மாறும் பிள்ளைகளை அவர்களது பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த ஆண்டு தன்பாலின ஈர்பாளர்களை ஆசிர்வதிக்க கத்தோலிக்க பாதிரியார்கள் மறுப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து போப் பிரான்சிஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories