உலகம்

”பாரம்பரிய மாதமாக ஜனவரியை கொண்டாடும் கனடா” - தமிழுக்கும், தமிழருக்கும் பெருமை சேர்க்கும் ஜஸ்டின் ட்ரூடோ!

ஜனவரி மாதத்தை நாமும் தமிழர்களின் பாரம்பரிய மாதமாக எண்ணி கொண்டாடுகிறோம். நீண்ட நெடிய நாட்களாக கனடாவில் வாழ்ந்து வரும் தமிழினத்திற்கு எதிரொலியாகவும் அது திகழ்கிறது.

”பாரம்பரிய மாதமாக ஜனவரியை கொண்டாடும் கனடா” - தமிழுக்கும், தமிழருக்கும் பெருமை சேர்க்கும் ஜஸ்டின் ட்ரூடோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தைப் பொங்கல் திருநாளையொட்டி வாழ்த்திப் பேசியுள்ளார்.

அதில், “வணக்கம்! இன்றைய தினம் கனடாவில் உள்ள தமிழர்களும் உலகெங்கும் உள்ள தமிழர்களும் தைப்பொங்கல் மாத துவக்கத்தை, அதாவது நான்கு நாட்கள் அறுவடை தினத்தை கொண்டாடுகிறார்கள். அறுவடைக்கு நன்றி சொல்லும் தினமாக அது திகழ்கிறது. நண்பர்களும், குடும்பத்தினரும் ஒன்று கூடுவதற்கும், அன்பாகவும், அமைதியாகவும், மனம் விட்டும் மிகுதியாக அவர்கள் பேசுவதற்கும் சிறந்த வாய்ப்பாக அது அமைகிறது.

ஜனவரி மாதத்தை நாமும் தமிழர்களின் பாரம்பரிய மாதமாக எண்ணி கொண்டாடுகிறோம். நீண்ட நெடிய நாட்களாக கனடாவில் வாழ்ந்து வரும் தமிழினத்திற்கு எதிரொலியாகவும் அது திகழ்கிறது. கனடாவில் வாழும் தமிழர்கள் இந்நாட்டு வளர்ச்சிக்கு மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்பதோடு நம் நாடு வலிமையாக திகழ செயல்பட்டும் வருகிறார்கள்.

2018ம் ஆண்டு நாம் ஒருங்கிணைந்து முன்னேறத் தொடங்கி மேன்மேலும் முன்னேறி வருகிறோம். அத்துடன் ஒருங்கிணைக்கும் வல்லமையுடன் கொண்டாடி வருகிறோம். ஒரு சிறந்த நாடாக நம் நாடு திகழ தினம் தினம் கடுமையாக உழைத்து வருகிறோம்.

எனது சார்பிலும், சோபி உள்ளிட்ட எனது குடும்பத்தினர் சார்பிலும் தைப் பொங்கல் கொண்டாடுபவர்களுக்கும் தமிழ்ப் பாரம்பரிய மாதத்தை கொண்டாடுபவர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு வாழ்த்திய கனடா பிரதமர், நிறைவாக, ‘இனிய தைப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்’ என்று தமிழில் குறிப்பிட்டார்.

banner

Related Stories

Related Stories