உலகம்

BlackBerry சேவை நேற்று முதல் முற்றிலும் நிறுத்தம்... போன்கள் எதுவும் செயல்படாதா? - உண்மை என்ன?

Blackberry OS போன்கள் இயக்கம் நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

BlackBerry சேவை நேற்று முதல் முற்றிலும் நிறுத்தம்... போன்கள் எதுவும் செயல்படாதா? - உண்மை என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

Blackberry OS போன்கள் இயக்கம் நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் அதிகாரபூர்வ வலைதள பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவைச் சேர்ந்த பிரபல செல்போன் நிறுவனம் பிளாக்பெர்ரி. ஆப்பிள் ஐபோனுக்கு நிகராக பாதுகாப்பு அம்சங்களில் தனித்தன்மையுடன் செயல்பட்ட நிறுவனமான பிளாக்பெர்ரிக்கென தனி வாடிக்கையாளர் பட்டாளமே இருந்து வந்தது.

கீபோர்டு போன்கள் செயல்பாட்டில் இருந்த வரை பிளாக்பெர்ரி புகழ்பெற்றதாக இருந்தது. ஆனால்,ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களின் ஆதிக்கம் வெகுவாகப் பெருகிய நிலையில் பிளாக்பெர்ரி சரிவை கண்டது.

கடைசியாக 2013-ல் அறிமுகப்படுத்தப்பட்ட BlackBerry 10 மாடல் போன்கள் தனது புகழை தக்கவைக்க முயன்றது. மேலும், இந்தியாவில் ஆப்டிமஸ் நிறுவனத்துடனும், உலக அளவில் டிசிஎல் கம்யூனிகேஷன் என்ற நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்தது. ஆனால், அந்த முயற்சியில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை.

ஒரு கட்டத்தில் தனது பிராண்ட் உரிமத்தை மற்ற நிறுவனங்களுக்கு விற்றுவிட்டு கார்ப்பரேட் பாதுகாப்பு சேவை உரிமைகளை மட்டும் பராமரிக்கத் தொடங்கியது பிளாக்பெர்ரி.

இந்நிலையில் பிளாக்பெர்ரி OS போன்கள் ஜனவரி 4 முதல் நம்பகத்தன்மையுடன் செயல்படாது என்று அந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BlackBerry சேவை நேற்று முதல் முற்றிலும் நிறுத்தம்... போன்கள் எதுவும் செயல்படாதா? - உண்மை என்ன?

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே இந்த சேவைகளை நிறுத்தப்போவதாக அறிவித்தது Blackberry. ஆனால், சில பயனர்களின் கோரிக்கையை ஏற்று சேவையை நீடித்த பிளாக்பெர்ரி இப்போது நிறுத்தும் முடிவுக்கு வந்துள்ளது.

ஆனாலும், ஆண்ட்ராய்ட் OS-ல் இயங்கும் பிளாக்பெர்ரி போன்கள் வழக்கம்போல் இயங்கும். பிளாக்பெர்ரி 7.1 OS, பிளாக்பெர்ரி 10, பிளாக்பெர்ரி OS 2.1 உள்ளிட்ட மாடல் போன்கள் மட்டும் நேற்று முதல் செயல்படவைல்லை.

இந்த மாடல்களில் இனி எந்தவொரு செயல்பாட்டையும் மேற்கொள்ள முடியாது. மேலும், இந்த மாடல்களில் இனி எந்தவித அப்டேட்டும் கிடைக்காது என்றும் பிளாக்பெர்ரி நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

எனினும், Blackberry நிறுவனம் அதன் பிராண்டை உலக சந்தையில் நிலைநிறுத்த பல்வேறு புதுமைகளை புகுத்துவதில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories