உலகம்

அமெரிக்காவை மீண்டும் மிரட்டும் கொரோனா.. ஒரே நாளில் 3 லட்சம் பேர் பாதிப்பு.. உலக நாடுகள் அச்சம்!

அமெரிக்காவில் ஒரே நாளில் 3 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவை மீண்டும் மிரட்டும் கொரோனா.. ஒரே நாளில் 3 லட்சம் பேர் பாதிப்பு.. உலக நாடுகள் அச்சம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா தொற்றிலிருந்து உலகம் படிப்படியாக மீண்டு வந்த நிலையில் ஒமைக்ரான் தொற்று மீண்டும் உலகத்தை அச்சமடையச் செய்துள்ளது. அதேநேரம் கொரோனா தொற்றும் மீண்டும் வேகமாகப் பரவி வருகிறது.

அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் ஒமைக்ரான் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. அதேநேரம் தினமும் லட்சத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் மட்டும் 50 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அமெரிக்காவில் ஒரே நாளில் 3 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1,811 பேர் உயிரிழந்துள்ளனர். இது உலக மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் ஏற்கனவே கொரோனா தொற்றால் கொத்துக்கொத்தாக மக்கள் உயிரிழந்த நிலையில் மீண்டும் அங்கு தொற்றின் வேகம் அதிகரித்துள்ள அந்நாட்டு மக்களை அச்சமடையச் செய்துள்ளது.

அமெரிக்காவைப் போலவே, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஒமைக்ரான் தொற்றுடன் சேர்ந்து கொரோனா தொற்றும் வேகமாகப் பரவி வருகிறது. மேலும் ஒமைக்ரான் தொற்று உலகம் முழுவதும் அபாய கட்டத்தை எட்டிவிட்டதாக உலக சுகாதார அமைப்பு கவலையுடன் தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories