உலகம்

நடுக்கடலில் வெடித்துச் சிதறிய ஹெலிகாப்டர்.. 12 மணி நேரம் நீந்தி உயிர் தப்பிய அமைச்சர் - ஆச்சர்ய சம்பவம்!

மடகாஸ்கர் நாட்டின் அமைச்சர் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிர் தப்பியுள்ளார்.

நடுக்கடலில் வெடித்துச் சிதறிய 
ஹெலிகாப்டர்.. 12 மணி நேரம் நீந்தி உயிர் தப்பிய அமைச்சர் - ஆச்சர்ய சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆப்பிரிக்க கண்டத்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ளது மடகாஸ்கர் என்ற நாடு. இந்த நாட்டின் கடற்பகுதியில் 130 பேருடன் பயணித்த கப்பல் ஒன்று திடீரென விபத்தில் சிக்கியுள்ளது.

இது பற்றி தகவல் அறிந்த மடகாஸ்கர் மீட்புப் படையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக களமிறங்கினர். இவர்களுடன் அந்நாட்டு அமைச்சர் கேலேவும் ஹெலிகாப்டரில் சென்றுள்ளார்.

இதையடுத்து அமைச்சர் சென்ற ஹெலிகாப்டர் கடல் பகுதியின் மேலே சென்று கொண்டிருந்தபோது திடீரென வெடித்துச் சிதறியுள்ளது. இதனால் கடலில் விழுந்த அமைச்சர் கேலே 12 மணி நேரம் கடலில் நீந்தி மஹாம்போ என்ற கரையை அடைந்துள்ளார்.

பிறகு கடற்கரைப் பகுதியில் அவரது உடலைப் பார்த்த மீன்வர்கள் மீட்டு முதலுதவி செய்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் அப்பகுதிக்கு விரைந்து வந்து அமைச்சர் கேலேவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்த விபத்து குறித்து அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. மேலும் "நான் இறப்பதற்கான காலம் இன்னும் வரவில்லை" என அமைச்சர் கேலே தெரிவித்துள்ளார்.

அதேபோல், அமைச்சர் கேலேவை போன்றே மற்றொரு அதிகாரியும் உயிர் தப்பியுள்ளார். இவர்களுடன் சென்ற மற்ற இரண்டு அதிகாரிகள் குறித்து இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இதனால் அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும், கப்பல் விபத்தில் சிக்கியவர்களையும் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் 39 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 68 பேரை காணவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories