உலகம்

வட கொரியாவில் சிரிக்கத் தடை? : கிம் பற்றி பரவும் தகவல்கள் உண்மையா?

இதுவரை நாம் கேள்விப்பட்ட கிம் கதைகள் எதிலும் துளி கூட உண்மை இல்லை.

வட கொரியாவில் சிரிக்கத் தடை? : கிம் பற்றி பரவும் தகவல்கள் உண்மையா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

‘ஒரு ஊர்ல ஒரு பாட்டி இருந்தாங்களாம்’ என்ற கதை கேட்ட காலம் போய், ‘வடகொரியாவுல கிம்னு ஒருத்தர் இருக்காராம்’ என்கிற கதை கேட்கும் காலத்தில் இருக்கிறோம். எல்லா ஊடகங்களும் செய்திகளும் கிம்மை பற்றிச் சொல்ல விதவிதமான கதைகளை வைத்திருக்கின்றன. கதைகள் கொடுக்கும் சுவாரஸ்யத்தில் ஈர்க்கப்படுவதால், கதை சொல்லும் யாவும் உண்மை என நம்பத் தொடங்கிவிடுகிறோம். அக்கதை பற்றிய உண்மை ஆராயப்படும்போது கதையை நம்பிவிட்ட காரணத்தாலேயே நாம் உண்மையை மறுதலிக்க ஆரம்பிக்கிறோம்.

கிம்மை பற்றி சமீபத்தில் வந்திருக்கும் செய்தி, ‘வடகொரிய மக்கள் சிரிக்கக் கூடாது’ என அவர் உத்தரவிட்டிருக்கிறாராம். இதற்கு முன்னும் நிறைய வந்திருக்கின்றன. இது மட்டுமல்ல, இன்னும் பல தகவல்கள் ஊடக சுவாரஸ்யத்துக்கு புதிது புதிதாக வந்தபடி இருக்கின்றன.

வட கொரிய அதிபர் கிம் ஜாங் யுன் பற்றி சொல்லப்படுகிற விஷயங்களை எல்லாம் பரவலாக ஐந்து வகைகளாக பிரிக்கலாம்.

வகை 1:

வடகொரிய அதிபர் கிம் மிக மிக மிக மிக மிக பயங்கரமானவர்.

பல சைக்கோ த்ரில்லர் படங்களில் வரும் கதாபாத்திரங்கள் எல்லாமும் சேர்ந்து உருவாக்கிய ஒற்றை உருவம்!

வகை 2:

சொந்த நாட்டு மக்கள் என்றாலும் எந்தத் தயக்கமும் இல்லாமல், பல லட்சம் பேரை பஞ்சத்திலும் ஏழ்மையிலும் வாட்டுபவர்.

யாராவது கிம்மை எதிர்த்துப் பேசினால், அவர்களை மிகப்பெரிய கடாயில் கொதிக்கும் எண்ணெய்யில் ஸ்லோமோஷனில் தூக்கிப்போட்டு கொல்லக்கூடியவர்.

வகை 3:

கிம்மின் ஆட்சியில் மக்களுக்கு பேச்சுரிமையே கிடையாது.

அன்றாடத் தேவைக்காக கடைக்குச் சென்று ஒரு பொருளை கேட்டு வாங்க வேண்டுமென்றாலும் கையோடு ஒரு பேப்பரையும் பேனாவையும் எடுத்துச் செல்ல வேண்டும்.

வகை 4:

மொத்த உலகத்தையும் அழிக்கவல்ல அணு ஆயுதங்களை வைத்திருப்பவர்.

எல்லாவகை ஆயுதங்களுக்கான பொத்தானையும் தன் கோட் பாக்கேட்டுக்குள்ளேயே வைத்திருப்பவர்.

Etc. Etc.

ஒரு மாற்றத்துக்காக வரலாறைப் புரட்டி பார்த்தால், வட கொரியாவைப் பற்றியும் கிம்மைப் பற்றியும் பெரும் உண்மைகள் ஒளிந்திருப்பது புலப்படும். கிம்மை பற்றிய இத்தனை கதைகளுக்கான காரணமும் புரியும். அந்த உண்மைகளுள் முக்கியமான உண்மை, இதுவரை நாம் கேள்விப்பட்ட கிம் கதைகள் எதிலும் துளி கூட உண்மை இல்லை என்பதுதான்.

வட கொரியாவில் சிரிக்கத் தடை? : கிம் பற்றி பரவும் தகவல்கள் உண்மையா?

அப்படியெனில் உண்மை என்ன?

உண்மை 1:

வடகொரியாவும் இந்தியாவைப் போல காலனியாதிக்கத்தில் இருந்த நாடுதான். நமக்கு பிரிட்டிஷ் என்றால் வடகொரியாவுக்கு ஜப்பான். இரண்டாம் உலகப்போரின் முடிவு வரை, வடகொரியா மற்றும் தென்கொரியா ஒன்றாக இருந்தது. உலகப்போரில் ஜப்பானை வீழ்த்திய பிறகு தென்கொரியா மற்றும் வடகொரியா என இரண்டு நாடுகளாக கொரியா பிரிக்கப்பட்டது. தென்கொரியா அமெரிக்காவுக்கு. வட கொரியா சோவியத் யூனியனுக்கு!

உண்மை 2:

வட கொரியா, கம்யூனிச ஆட்சி கொண்ட நாடு. கம்யூனிசம், அமெரிக்காவுக்கு ஆதரவு கொடுக்கும் எந்த நாட்டுக்கும் பிடிக்காத தத்துவம்! ஏனென்றால் எல்லாருக்கும் எல்லா வசதியும் வளமும் கிடைக்க வேண்டுமென வலியுறுத்தும் தத்துவம், கம்யூனிச தத்துவம்.

உண்மை 3:

கம்யூனிச ஆட்சி என சொல்லப்பட்டாலும் வட கொரியாவின் ஆட்சிமுறை ‘ஸ்டாலினிய’ ஆட்சியை பின்பற்றும் முறை. சோவியத் யூனியனை ஆண்ட ஸ்டாலின் இன்று வரை அமெரிக்கா உள்ளிட்ட சுரண்டல் நாடுகளுக்கு பச்சை மிளகாய். கடும் எதிரி. ஒப்பற்ற தலைவன்!

உண்மை 4:

அமெரிக்காவின் பொருளாதாரத்தை தன் நாட்டுக்குள் அனுமதிக்காதவர் வட கொரிய அதிபர் கிம். அந்த நாட்டின் வளத்தையும் மக்களையும் தன் இஷ்டத்துக்கு சுரண்ட வாய்ப்பு கிடைக்காததால், அருகிலிருக்கும் தென் கொரியாவை வைத்து தொடர்ந்து வட கொரியாவுக்கு பிரச்சினை கொடுத்துக்கொண்டே இருக்கிறது அமெரிக்கா.

உண்மை 5:

சுவாரஸ்யமான ட்விஸ்ட் என்னவென்றால், ஸ்டாலினிய ஆட்சியை பின்பற்றும் கிம்முக்கு இன்று சொல்லப்படும் கதைகள் யாவும் அன்றைய சோவியத்தை ஆண்ட ஸ்டாலினுக்கும் சொல்லப்பட்டு வந்தது என்பதே. கொடுங்கோலர், மக்களை பஞ்சத்தில் வாட்டியவர், கொடூரமானவர், சைக்கோ கொலைகாரர் போன்ற இதே கதைகளே ஸ்டாலினுக்கும் சொல்லப்பட்டன.

எல்லாவற்றையும் தாண்டி இருக்கும் கேள்வி ஒன்றுதான். கிம் நல்லவரா கெட்டவரா?

- அடுத்த பகுதியை வாசிக்க மேலே க்ளிக் செய்யவும்.

banner

Related Stories

Related Stories