உலகம்

வெடித்த பெட்ரோல் டேங்கர் லாரி.. தீயில் கருகி 62 பேர் பலி.. ஹைதி நாட்டை உலுக்கிய சம்பவம்!

ஹைதி நாட்டில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்த விபத்தில் 62 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெடித்த பெட்ரோல் டேங்கர் லாரி.. தீயில் கருகி 62 பேர் பலி.. ஹைதி நாட்டை உலுக்கிய சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஹைதி நாட்டில் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில் செவ்வாயன்று காலை ஹைடியன் நகரின் கேப் ஹைடியன் பகுதியில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்த விபத்தில் 62 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேப் ஹைடியன் பகுதியில் பெட்ரோல் டேங்கர் லாரி கட்டுப்பாட்டை இழந்து திடீரென விபத்தில் சிக்கியுள்ளது. அப்போது லாரியில் இருந்து வெளியேறிய பெட்ரோலை பிடிக்க அப்பகுதி மக்கள் திரண்டுள்ளனர்.

அந்நேரம் பார்த்து டேங்கர் லாரி திடீரென வெடித்தது. இதனால் அப்பகுதி முழுவதுமே தீயில் கருகியுள்ளது. அங்கு 40க்கும் மேற்பட்ட வீடுகள் இருந்துள்ளன. லாரி வெடித்ததில் இந்த வீடுகள் அனைத்தும் தீயால் சேதடைந்துள்ளன. மேலும் பலரின் உடல்கள் தீயில் கருகியுள்ளால் அவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் இதுவரை 62 பேர் உயிரிழந்துள்ளதாகத் துணை மேயர் பேட்ரிக் அல்மோனார் தெரிவித்துள்ளார். மேலும் வீடுகளுக்குள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த விபத்து தேசிய பேரழிவு என்றும் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தக்கூடிய வகையில் நாடுமுழுவதும் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் அந்நாட்டுப் பிரதமர் ஏரியல் ஹென்றி அறிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories