உலகம்

ஒரே நாளில் 10 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட நபர்... அதிர்ச்சியடைந்த சுகாதார அமைச்சகம்!

ஒரே நபர் 24 மணி நேரத்திற்குள் 10 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே நாளில் 10 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட நபர்... அதிர்ச்சியடைந்த சுகாதார அமைச்சகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

நியூசிலாந்தில் ஒரே நாளில் 10 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா தொற்று உலகையே அச்சுறுத்திய நிலையில், கொரோனாவை வீழ்த்த தடுப்பூசி ஒன்றே ஆயுதமாக உள்ளது. உலக நாடுகள் அனைத்தும் தங்கள் குடிமக்களுக்கு தடுப்பூசி செலுத்த தீவிரமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இதற்கிடையே, ஒமைக்ரான் தொற்றுக்கு எதிராக பாதுகாக்கும் நோக்கில், சில நாடுகள் பூஸ்டர் டோஸ்கள் செலுத்தும் பணியையும் தொடங்கியுள்ளன. இந்தியாவிலும் பூஸ்டர் டோஸ் செலுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

ஒமைக்ரான் பீதிக்கு மத்தியில் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவர் 24 மணி நேரத்தில் 10 டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்ட சம்பவம் நியூசிலாந்து நாட்டில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கொரோனா தடுப்பூசி திட்டத்தின் குழு மேலாளர் ஆஸ்ட்ரிட் கோர்னிஃப் கூறுகையில், “இதுகுறித்து அமைச்சகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. நாங்கள் இந்த விஷயத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளோம். ஏனெனில் பல தடுப்பூசிகளை எடுத்துக்கொள்வதால் ஆபத்து ஏற்படலாம்.

குறிப்பிட்ட அந்த நபர் ஒரு நாளில் பல தடுப்பூசி மையங்களுக்குச் சென்று வெவ்வேறு நபர்களின் அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி நிறைய தடுப்பூசிகளை போட்டுக் கொண்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தவும் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories